டி20க்கு பிரித்வி ஷா, ஓடிஐ-க்கு ஷுப்மன் கில்; இதான் என்னோட தீர்ப்பு – கவுதம் கம்பீர்!

0
252

பிரித்வி ஷா டி20 போட்டிக்கும், ஷுப்மன் கில் ஒருநாள் போட்டிக்கும் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

இந்திய அணியின் இளம் துவக்க வீரர் ஷுப்மன் கில், டி20 போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஒருநாள் போட்டிகளைப் போல டி20யில் அவரது அணுகுமுறை இருக்கிறது. மிகவும் ஸ்லோவாக ஆரம்பிக்கிறார். இது இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுக்காது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இலங்கை அணியுடனான டி20 தொடரின் போது, 3 போட்டிகளில் 58 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 7 ரன்கள் மற்றும் 11 ரன்கள் முறையே அடித்திருக்கிறார்.

இதுவரை ஆடியுள்ள 5 டி20 போட்டிகளில் 100 ரன்கள் கூட அடிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சுழல் பந்துவீச்சிற்கு ஷுப்மன் கில் திணறுகிறார் என்கிற விமர்சனத்தையும் சிலர் முன்வைத்திருக்கின்றனர்.

இதனால், டி20 போட்டிகளில் ஓபனிங் செய்ய பிரிதிவி ஷா எடுத்து வரப்பட வேண்டும். ஷுப்மன் கில் வெளியில் அமர்த்தப்பட வேண்டும் என்று விவாதங்கள் நிலவி வருகிறது. இந்த விவாதத்திற்கு பதில் கொடுத்திருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் பேசியதாவது:

- Advertisement -

ஷுப்மன் கில் அணுகுமுறை 50 ஓவர் போட்டிகளுக்கு சரியானதாக இருக்கிறது. பவர் பிளே ஓவர்களில் சற்று நிதானமாக விளையாடிவிட்டு மிடில் ஓவர்களில் ஸ்பின்னர் எதிர்கொள்வதால், அவரால் எளிதாக அதற்கு தகவமைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் டி20 போட்டிகளில் சிலநேரம் பவர்-பிளை ஓவர்களில் ஸ்பின்னர்கள் வந்துவிடுவார்கள். அப்போது ஷுப்மன் கில் திணறுகிறார். இதை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் நாம் பார்த்தோம். ஆகையால் ஷுப்மன் கில் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு இல்லை. அவரை 50 ஓவர் போட்டிகளில் பயன்படுத்த வேண்டும்.

அதே நேரம் பிரிதிவி ஷா துவக்க ஓவர்களில் இருந்ததே பவுலர்களை அட்டாக் செய்வார். ஐபிஎல் போட்டிகளில் பல நேரங்களில் இதை நாம் பார்த்திருக்கிறோம். அவரது அணுகுமுறை டி20 போட்டிகளுக்கு சரியாக இருக்கும். இதனால் இவரை டி20 போட்டிகளில் பயன்படுத்த வேண்டும்.” என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்தார்.