“நான் முன்ன மாதிரி விராட் கோலி கிட்ட பேசறதில்ல.. காரணம் இதுதான்!” – யுவராஜ் சிங் மீண்டும் பரபரப்பு பேச்சு!

0
6686
Virat

பெரிய வெற்றிகளை பெற்றுள்ள இந்திய கேப்டன்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும் பெருமையும், இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கும் கொடுக்கப்பட வேண்டும்.

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அவர் ஒரு வீரராக உண்டாகிய தாக்கம்தான் இந்திய அணிக்கு உலகக்கோப்பை பெற்று தந்தது என்றே கூறலாம்.

- Advertisement -

யுவராஜ் சிங் எப்பொழுதும் அணிக்கான வீரராக இருந்து வந்திருக்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. களத்திற்குள் எப்பொழுதும் அவர் நூறு சதவீத உழைப்பை கொடுக்கக் கூடியவர், மேலும் அவர் உண்டாக்கும் தாக்கம் மொத்த போட்டியையும் மாற்றிவிடும்.

இந்த வகையில் இப்பொழுது வரை எடுத்துக் கொண்டால் யுவராஜ் சிங்கின் இடம் நிரப்பப்படாமல் அப்படியே தான் இருக்கிறது. இளம் வீரராக உள்ளே வந்து சாம்பியன்ஸ் டிராபியில் அசுரபலம் கொண்ட ஆஸ்திரேலியாவை சாய்ந்தது முதல், அதற்கு அடுத்து 2007 டி20 உலக கோப்பை 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மீண்டும் ஆஸ்திரேலியாவை சாய்த்தது வரை, அவர் பெரிய போட்டிகளில், பெரிய அணிகளுக்கு எதிராக நம்ப முடியாத வகையில் செயல்பட்டு இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்த அவர் நானும் மகேந்திர சிங் தோனியும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம் என்ற காரணத்திற்காக, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்கின்ற அர்த்தம் கிடையாது, எங்களுடைய வாழ்க்கை முறை வித்தியாசமானது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தால். தற்பொழுது விராட் கோலி பற்றியும் அப்படியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

யுவராஜ் சிங் விராட் கோலி பற்றி கூறும் பொழுது “நான் விராட் கோலி உடன் முன்பு போல் பேசுவதில்லை. காரணம் விராட் கோலி தற்பொழுது மிகவும் பிசியாக இருக்கிறார். அவரை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

அதே சமயத்தில் முன்பு சீக்குதான் விராட் கோலி. ஆனால் இன்று அவர் விராட் கோலி. இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

( நகைச்சுவையாக) அவர் சிறந்த கால்பந்தாட்ட வீரரா? என்று கேட்டால், அவரே அப்படி நினைத்துக் கொள்வார். ஆனால் நான்தான் அவரை விட சிறந்த கால்பந்தாட்ட வீரன். ஆனால் விராட் கோலி தன்னை ரொனால்டோவாக நினைப்பார்.

நான் கால்பந்தில் அவருடன் நிறைய முறை சண்டையிட்டு இருக்கிறேன். மேலும் கால்பந்தில் நான் நெக்ரா, சேவாக் என எல்லோருடனும் சண்டையிட்டு இருக்கிறேன்!” என்று கலகலப்பாக கூறியிருக்கிறார்!