சமி ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியாது; சனகாவை நாங்கள் வேறு மாதிரி அவுட் ஆக்க நினைக்கவில்லை – ரோகித் சர்மா!

0
5227
Rohit Sharma

இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி இன்று அசாம் மாநிலம் கவ்ஹாத்தி மைதானத்தில் மோதியது!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா 83 ரன்கள் கில் 70 ரன்கள் விராட் கோலி 113 ரன்கள் எடுக்க ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் பத்து ஓவர்கள் பந்து வீசி 88 ரன்கள் வீட்டு தந்து மூன்று விக்கெட்டுகளை ரஜிதா கைப்பற்றினார்.

- Advertisement -

அடுத்து விளையாடிய இலங்கை அனைத்து நிசான்கா 72 ரன்கள், தனஞ்செய டி சில்வா 42 ரன்கள், கேப்டன் சனகா 108 ரன்கள் சேர்க்க இலங்கையணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்தது. இந்தியா அணிதரப்பில் எட்டு ஓவர்கள் பந்துவீசி 57 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட்டுகளை உம்ரான் மாலிக் கைப்பற்றினார். இறுதியாக இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது!

இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் சனகாவின் சதத்திற்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை வீசிய முகமது சமி சனகா பந்துவீச்சு முனையில் நிற்கும் பொழுது அவர் கிரீஸ் தாண்டி செல்லும் பொழுது பந்தை ஸ்டெம்பில் அடித்திருப்பார். ஆட்ட சட்ட விதிமுறைப்படி அந்த நேரத்தில் சமியால் சனகா ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் இந்திய அணியில் சமியோ கேப்டன் ரோஹித் சர்மாவோ அவுட் ஆப்பில் கேட்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” நாங்கள் நன்றாக தொடங்கினோம். இவ்வளவு பெரிய ரன்களை குவிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் பங்களித்தால் மட்டுமே முடியும். மற்ற பேட்ஸ்மேன்கள் வந்து தைரியமாக ரண்களை குவிக்க ஆரம்பத்தில் அருமையான மேடை அமைக்கப்பட்டது. நாங்கள் இன்னும் கொஞ்சம் பந்து நல்ல முறையில் வீசி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பனி பிற்பகுதியில் குறைவாக இருந்த பொழுதும் கூட பந்துவீச்சு குறித்து நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. நாங்கள் ஒரு யூனிட் ஆக சிறப்பாகவே பந்து வீசினோம். இதுபோன்ற ஆட்டங்களில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சமி ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியாது. சனகா 98 ரண்களில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் அவரை அந்த மாதிரி ரன் அவுட் முறையில் வெளியேற்ற விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான முறையிலேயே அவரை ஆட்டம் இழக்க வைக்க முயற்சி செய்தோம். அவருக்கு ஹாட்ஸ் ஆப்!” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்!