“இந்திய அணியிலிருந்து நான் ஏன் நீக்கப்பட்டேன் என்று தெரியவில்லை” – ஹனுமா விகாரி வேதனை!

0
442
Vihari

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது!

இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது.

- Advertisement -

முதலாவதாக நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று டொமனிக்கா மைதானத்தில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே துவங்குகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தற்பொழுது 29 வயதான ஹனுமா விகாரி இடம் பெற்றிருந்தார். மேலும் அந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் அவரே இருந்தார்.

- Advertisement -

இதுவரை ஹனுமா விகாரி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 839 ரன்கள் எடுத்துள்ளார். இவரது முதல் டெஸ்ட் அறிமுகம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் 2018 ஆம் ஆண்டு நடந்தது. கடந்த ஆண்டு இவரது கடைசி டெஸ்ட் போட்டி மீண்டும் இங்கிலாந்திலேயே நடந்தது. இவருக்கு அதற்கடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவரது உள்நாட்டு சிவப்புப்பந்து புள்ளி விபரங்கள் மிகச் சிறப்பான முறையில் இருக்கின்றன. இவரது உள்நாட்டு சிவப்பு பந்து பேட்டிங் ஆவரேஜ் 53 இருக்கிறது. இவர் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தர வீரராக இடம் பெறுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்த மூன்று வருட இடைவெளியில், இவரது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் நிற்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஹனுமா விகாரி ” எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. நான் ஏன் அணியில் இருந்து விலக்கப்பட்டேன் என்று புரியவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னால் முடிந்த சிறந்ததை நான் அணிக்காக செய்தேன்.

ஒருவேளை இந்திய அணி நிர்வாகத்திற்கு நான் கொடுத்த சிறந்தவைகள் போதாமல் இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் முன்னேற முயற்சி செய்வேன். ஒரு விளையாட்டு வீரராக உங்களால் அவ்வளவு தான் செய்ய முடியும். வரும் சீசன்களில் நான் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சி செய்வேன்!” என்று வேதனையாக கூறியிருக்கிறார்!

இன்று இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -