“கவனிச்சிங்களா தெரியல.. ருதுராஜ் பண்ண அந்த விஷயத்திலேயே எவ்ளோ பெரிய ஆளுனு தெரிஞ்சிருச்சு!” – இர்பான் பதான் வியப்பு!

0
8377
Ruturaj

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக துவக்க வீரர் இடத்திற்கு ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் உலகக் கோப்பை திட்டத்தில் இல்லாத காரணத்தினால், அவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு தரப்படாது என்று பலரும் நினைத்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகம் வித்தியாசமாக யோசித்து, அந்த ஒரு இடத்தை திலக் வர்மாவுக்கு தராமல், ருதராஜ்க்கு தந்து ஆச்சரியப்படுத்தியது.

இந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற ருத்ராஜ் அதற்கு திருப்பி பதில் சொல்லும் விதமாக பேட்டிங் மூலம் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 77 பந்துகளில் 10 பவுண்டரிகள் மூலம் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த அரைசதம் ருதுராஜுக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் அரைசதமாக பதிவாகியது. மேலும் அவர் கில் உடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை இந்திய அணிக்கு எளிதாக்கினார்.

- Advertisement -

நேற்று ருதுராஜ் பேட்டிங் குறித்து ட்வீட் செய்துள்ள இர்பான் பதான் அதில் கூறுகையில் “அந்த இரண்டு பேக் புட் பஞ்ச், அவர் எவ்வளவு திறமை கொண்ட வீரர் என காட்டி இருக்கும்!” என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். கிரிக்கெட்டில் இந்த வகையான ஷாட்கள் விளையாடுவது மிகவும் கடினமானது. இதற்கு பெரிய அளவில் பேட்டிங் திறமை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ருதுராஜ் பற்றி கூறுகையில்
“ருதுராஜ் மிகக்குறைவான வாய்ப்புகளை பெற்றார். ரோகித் சர்மா விளையாடும் வரை, அவருடன் கில் இருக்கும் வரை அவருக்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். யாராவது காயம் அடைந்தாலோ இல்லை ஓய்வு எடுத்தாலோ இவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

நேற்று இவர்கள் பேட்டிங் செய்யும்பொழுது இந்தியாவின் எதிர்காலம் பேட்டிங் செய்வது போல இருந்தது. இருவரும் மிகவும் திறமையானவர்கள் மற்றும் பார்ப்பதற்கு கண்ணுக்கு எளிதாக தெரியக்கூடிய வகையில் விளையாடுபவர்கள். அவர்கள் புதிதாக எந்த ஷாட்களையும் உருவாக்குவது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!