“சிங்கிளே எடுக்க தெரியல இவங்க உலக சாம்பியனா?.. இந்தியாவ இங்கிலாந்து ஜெயிக்க வாய்ப்பே கிடையாது!” – ஹர்பஜன் சிங் பரபரப்பான கருத்து!

0
662
Harbajan

கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது!

இதற்கு அடுத்த இரண்டு நாட்கள் இணையதளம் எங்கும் பாகிஸ்தான் அணி குறித்த விமர்சனங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு பாகிஸ்தானில் இருந்தும் வெளியிலிருந்தும் பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தன.

- Advertisement -

தற்பொழுது இப்படியான விமர்சனங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக, இங்கிலாந்து அணி இலங்கையிடம் தோல்வி அடைந்து சிக்கி இருக்கிறது.

இங்கு குறிப்பிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் அணி அடைந்ததும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி. அதேபோல் உலக சாம்பியன் இங்கிலாந்தும் இலங்கைக்கு எதிராக படுதோல்வியை அடைந்திருக்கிறது. இதுவரை இங்கிலாந்து பெற்ற எந்த தோல்வியும் நெருக்கமான ஒன்றாக இல்லை என்பதுதான் கவலையான விஷயம்.

இப்படி இருக்கும் பொழுது, இங்கிலாந்து அணி அடுத்த போட்டியில் இந்தியாவை தோற்கடித்து, இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் பேசியிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “ஜோஸ் பட்லர் இவ்வளவு க்ளூ இல்லாமல் இருந்தது கிடையாது. உலகக்கோப்பைக்காக ஓய்வு பெற்றுவிட்ட பென் ஸ்டோக்ஸ் மீண்டும் கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் காயமடைந்தார். மேலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் சரியான தாக்கத்தை உருவாக்கவில்லை.

இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இலக்கை துரத்தவே விரும்புகிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கவே விரும்புகிறார்கள். பெரிய ஷாட்கள் அடிப்பதை விட்டுவிட்டு பார்த்தால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் ரன் எடுக்கவே தெரியவில்லை. இந்த வடிவ கிரிக்கெட்டை எப்படி விளையாடுவது என்று அவர்கள் மறந்து விட்டார்கள் போல தெரிகிறது. அவர்கள் உலக சாம்பியன் போல் தெரியவில்லை.

இங்கிலாந்துக்கு அடுத்த போட்டி இந்தியாவுடன் நடக்கிறது. அவர்களால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் மேலும் ஒரு தோல்வியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆடுகளம் சுழற் பந்து வீசிக்கு சாதகமாக இருக்க அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. எனவே இந்தியா மூன்று ஸ்பின்னர்கள் உடன் களமிறங்கும்!” என்று கூறியிருக்கிறார்!