“என்னோட டார்கெட் ஆசியா கப் கிடையாது.. சின்ன வயசுல இருந்து இருக்கு!” – சுப்மன் கில் சவால்!

0
1086
Gill

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த விராட் கோலி என்று பலராலும் ஆருடம் சொல்லப்படுபவர் இளம் வீரர் சுப்மன் கில். ஒரே நேரத்தில் அதிரடியாக விளையாடவும், இன்னிங்ஸை கட்டமைக்க தெரிந்த உலகத்தரம் வாய்ந்த வீரராகவும் இருக்கும் வீரர்!

இவர் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று மிகச் சிறப்பாக விளையாடியவர். அப்போதைய நேரத்தில் இவருடைய அணிக்கு கேப்டனாக இருந்தவர் பிரித்வி ஷா. இவரை அடுத்த விராட் கோலி என்று சொன்னால், பிரித்வி ஷாவை அடுத்த சச்சின் மற்றும் சேவாக் கலவை என்று சொன்னார்கள். ஆனால் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரும்பத்தகாத வகையில் அமைந்திருக்கிறது!

- Advertisement -

ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அனுபவ வீரரான ஷிகர் தவானை இந்த உலகக்கோப்பையில் வெளியில் வைத்து, இளம் வீரரான கில்லை மிகத் தைரியமாக கொண்டு வந்திருக்கிறது. இதில் ஒரு வித்தியாசமான விஷயம் என்னவென்றால், கில்லை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கொண்டு வரும் பொழுது கேப்டனாக இருந்ததே ஷிகர் தவான்தான்!

இவரை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கொண்டு வந்ததோடு நிறுத்தாமல் தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டிலும் வாய்ப்பு தந்து, டெஸ்ட் கிரிக்கெட் வரை என கூட்டிச்சென்று, இந்தியாவிற்கு அடுத்த பத்து வருடங்கள் மூன்று வடிவ கிரிக்கெட் விளையாடக்கூடிய நட்சத்திர வீரராக இவரை திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் இவருடைய திறமை என்று எடுத்துக் கொண்டால் அதில் குறை சொல்வதற்கு எதுவும் கிடையாது. எல்லோரும் தவறு செய்யவே செய்வார்கள், யார் அதை திருத்திக் கொள்கிறார்களோ அவர்கள் பெரிய வீரர்களாக வருகிறார்கள். இந்த விதத்தில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக, கடந்த முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்த தவறுகளில் இருந்து சுப்மன் கில் எந்த அளவிற்கு திருந்தி வந்தார்? என்பதை பார்த்தால் புரியும்.

- Advertisement -

நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய சுப்மன் கில் “2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வது எனக்கு இப்பொழுது ஒரு வீரராக இலக்கு. 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது நான் மிகவும் சிறுவனாக இருந்ததை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். விக்கெட் எப்படி இருக்கிறது என்று வெகு சீக்கிரமாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி செல்வதே என்னுடைய மனப்பான்மை.

ஒரு பேட்ஸ்மேனாக நிலைமையை சீக்கிரம் புரிந்து கொள்வதும், வேகத்தை சீக்கிரம் புரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமான ஒன்று. எனவே திட்டமிடல் மற்றும் ஆட்டம் அனைத்தும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒருவர் டி20 கிரிக்கெட்டுக்கு மாற வேண்டும் என்றால் அவர் மனதளவில் மாற வேண்டும். இங்கு மனதளவில் நீங்கள் மாறுவதுதான் மிக முக்கியமான விஷயம். எந்த அளவிற்கு நீங்கள் சீக்கிரமாக மாறுவீர்கள் அந்த அளவிற்கு நல்லது. மனதளவில் நீங்கள் மாறும் பொழுது அதற்கு ஏற்று உங்கள் உடலும் மாறும். எனவே இங்கு மனதளவில் மாறுவதில்தான் எல்லாம் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!