“நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கல.. உலக கோப்பைக்கு காத்துகிட்டு இருக்கோம்!” – ரோகித் சர்மா நிறைவான பேட்டி!

0
1825
Rohit

இன்று இந்தியா இலங்கை அணிகள் ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டதில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெரிய வரலாற்றை படைத்திருக்கிறது!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ், பும்ரா, ஹர்திக் மூவரும் 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு சுருட்டி அசத்தினார்கள். சிராஜ் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

மேற்கொண்டு களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் தருவதற்காக வந்த இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் 6.1 ஓவரில் இலக்கை எட்டி அனாயசமாக இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்தியா அணி எட்டாவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ரோகித் சர்மா கேப்டனாக இரண்டாவது முறையாக இந்திய அணிக்கு ஆசியக் கோப்பை பெற்றுத் தந்திருக்கிறார். மேலும் இந்திய கேப்டனாக எதிரணியை ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரண்களில் மடக்கியவர் என்ற சாதனையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

போட்டி முடிவுக்குப் பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா “இது மிகவும் சிறப்பான செயல்பாடு. இறுதிப் போட்டியில் இப்படி வந்து விளையாடுவது ஒவ்வொருவரின் மனதன்மையை காட்டுகிறது. பந்தில் சிறப்பான தொடக்கம் பெற்ற நாங்கள் பேட்டிங்கில் அற்புதமான முறையில் செயல்பட்டு இருக்கிறோம்.

- Advertisement -

நான் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தேன். எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் மூவரும் உழைத்த விதம் பெருமைப்படக்கூடியது. அவர்கள் மனதளவில் மிக மிக தெளிவாக இருக்கிறார்கள். இதைப் பார்க்க நன்றாக இருந்தது. இத்தகைய செயல்பாட்டை நீண்ட காலத்திற்கு போற்றுவோம்.

இவ்வளவு சிறப்பாக அமையும் என்று நான் நினைக்கவில்லை. இது தனி நபர்களின் திறமைக்கு கீழ் வருகிறது. இதற்கான பெருமையை முஹம்மது சிராஜிக்கு கொடுக்க வேண்டும். சீமர்கள் பந்தை காற்றிலும், ஆடுகளத்தில் இருந்தும் நகர்த்துவது அரிதானது. சிராஜ் மிகவும் முதிர்ச்சி அடைந்தவராக மாறி வருகிறார்.

இந்த போட்டியில் எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறோம். அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் மற்றும் உலகக்கோப்பையை எதிர்நோக்குகிறோம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹர்திக் மற்றும் இசான் பேட்டிங் செய்த விதம், பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் விராட் இருவரும் சதங்கள் அடித்தார்கள். கில் பேட்டிங் செய்த விதமும் சிறப்பானது. ஒவ்வொரு வீரர்களும் ஒரு கட்டத்தில் எழுந்து நின்று சிறப்பாக செயல்பட்டார்கள்!” என்று கூறி இருக்கிறார்!