“இத நான் நினைச்சு கூட பாக்கல.. இந்தியானா எல்லாருக்கும் பயம்!” – சரண்டர் ஆன சோயப் அக்தர்!

0
22277
Akthar

இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வகையில் நேற்று ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி 50 ரன்களுக்கு சுருட்டி, அபார வெற்றி பெற்று எட்டாவது முறையாக ஆசியக் கோப்பை தொடரை கைப்பற்றி இருக்கிறது!

நடந்து முடிந்திருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணி உள்ளே நுழையும் பொழுது, பலப்பெட்டிகள் டிக் செய்யப்படாமல் இருந்தது. பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தது. மேலும் விமர்சனங்களும் இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் இருந்து இந்திய அணி தனது முக்கிய வீரர்கள் அனைவரையும் கொண்டு விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் மிக எளிதான வெற்றியை பெற்றிருக்கிறது.

ஆசியக் கோப்பையில் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் இந்திய அணியின் நம்பிக்கையை மிக மிக அதிகமாக்கிக் கொண்டே சென்றது. இது இறுதிப்போட்டியில் 50 ரன்களுக்கு இலங்கை அணி சுருட்டும் அளவுக்கு வீரியமாக இருந்தது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் சார்பாக யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, அவர்கள் அதில் ஒரு சிறிய புள்ளியையாவது நம்பிக்கை அளிக்கும் விதமாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பெறப் போகும் வீரர்கள்!

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சோயப் அக்தர் கூறுகையில் ” ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரும் அவரது அணி நிர்வாகமும் நல்ல முடிவுகளை எடுத்து வருகிறார்கள். இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இங்கிருந்து இந்தியா உலகக்கோப்பையில் மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். ஆனால் நான் எதையும் உறுதியாக சொல்ல மாட்டேன். ஏனென்றால் துணை கண்டத்தின் அணிகள் எல்லாமே ஆபத்தான அணிகள்தான்.

இந்தியா தங்களின் நம்பிக்கையை உயர்த்தி உலகக் கோப்பைக்கு செல்கிறது. இந்தியா பின் தங்கிய நிலையில் ஆசியக் கோப்பையை துவங்கியது. ஆனால் தற்பொழுது பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லாமல் உலகத்தின் எல்லா அணிக்கும் இந்தியா ஆபத்தானதாக மாறியிருக்கிறது. இந்தியா உலக கோப்பைக்கு வருகின்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எல்லா பெட்டிகளையும் டிக் செய்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!