என்னோட டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு யார் நினைக்கிறதை பத்தியும் எனக்கு எந்த கவலையும் இல்லை – விராட் கோலி தடாலடி பேட்டி!

0
754
Viratkohli

நேற்று மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற முக்கியப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது!

இந்த போட்டியில் டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அந்த அணியின் முக்கிய பேட்டிங் தூண்களான கேப்டன் பாப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் எட்டு புள்ளி இரண்டு ஓவரில் 80 ரன்களுக்கு வெளியேறி விட்டார்கள்.

- Advertisement -

இதனால் மொத்த சுமையும் விராட் கோலியின் தோள் மீது இறங்கியது. பொறுப்பை எடுத்துக் கொண்ட அவர் மிகச் சிறப்பாக விளையாடி 60 பந்தில் சதம் அடித்து, 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 61 பந்தில் 101 எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார்.xc

பெங்களூரு அணி நிர்ணயித்த 198 என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 52 பந்தில் திருப்பி சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்தத் தொடரில் விராட் கோலி சுப்மன் கில் இருவருக்குமே இது இரண்டாவது சதம் ஆகும்.

நேற்றைய தோல்வி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சுற்றில் இருந்து வெளியேற்றி விட்டது. அதே சமயத்தில் குஜராத் அணியின் வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணியை பிளே ஆப் சுற்றுக்குள் கொண்டு வந்து இருக்கிறது.

- Advertisement -

சதம் அடித்ததற்கு பிறகு பேசிய விராட் கோலி “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இப்படித்தான் டி20 கிரிக்கெட் விளையாடுகிறேன். இடைவெளிகளை கண்டுபிடித்து நிறைய பவுண்டரிகள் அடிக்கிறேன். பின்னர் சூழ்நிலைகள் என்னை அனுமதித்தால் பெரிய ஷாட்களுக்கு போகிறேன்.

சூழ்நிலையைப் படித்து சூழ்நிலை என்ன கேட்கிறதோ அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும். நான் நன்றாக உணர்ந்தேன். எனது டி20 கிரிக்கெட் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் மீண்டும் எனது சிறந்த டி20 கிரிக்கெட் விளையாடுகிறேன்!” என்று நினைக்கிறேன்!