“இந்திய பவுலர்கள் காலுக்கும் புல்டாஸாவும் போடப் போறாங்க எனக்கு என்ன கவலை!” – பூரன் அசால்ட் பேச்சு!

0
2742
Pooran

இந்தியா தற்பொழுது தனது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது!

இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் தோற்று இருந்த நிலையில் நேற்று இரண்டாவது போட்டியில் விளையாடியது. இந்த போட்டிக்கான டாஸில் இந்த முறை இந்திய அணி வென்று இருந்தது!

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சில் தடுமாறி நிற்க, இளம் வீரர் திலக் வருமா சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 51 ரன்கள் சேர்க்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது.

இதை எடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இரண்டு விக்கெட்டுகள் இரண்டு ரன்களுக்கு விட்டது. இந்திய அணி அந்த இடத்திலிருந்து வேகம் பெற்று வென்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் பேட்டிங் செய்ய வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றி வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திருப்பி விட்டார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 40 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் எடுத்தார். 18.5 ஓவரில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டநாயகன் விருது பெற்ற பூரன் பேசுகையில் “நான் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டின் அழகே அது முடியும் வரை முடிவடையாது என்பதுதான். பேட்டிங்கில் நான் சீராக இருக்க விரும்புகிறேன். அது பர்பிள் பேட்ச் அளவுக்கு கிடையாது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையாக உழைத்து வந்தோம். ஆனாலும் தொடர்ந்து தோற்று வந்தோம். நான் இப்போது விளையாட்டை வித்தியாசமாக பார்க்கிறேன். எனது பேட்டிங்கில் தொடர்ந்து மகிழ்விக்க விரும்புகிறேன்.

இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்பது என்னுடைய பேட்டிங் எந்த விதத்திலும் பாதிக்காது. இது ஒரு சராசரியான விக்கெட் என்று நான் உணர்ந்தேன். நாங்கள் இதுபோன்ற விக்கெட்டுகளில் விளையாடி பழகிவிட்டோம். மேலும் நாம் பேட்டிங் செய்யும்போது பவுலர்கள் ஆப் வாலிஸ் மற்றும் புல்டாஸ் பந்துகளை தரப்போகிறார்கள். அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை!” என்று கூறி இருக்கிறார்.

தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் வலிமையான முன்னிலையை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால், வீழ்ந்து கிடக்கும் அவர்களது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக அது அமையும். இந்தியாவுக்கு அது வாழ்வா சாவா போட்டி!

- Advertisement -