“சதம் அடிக்காதது கவலை கிடையாது.. நான் யோசிச்சதே வேற..” – ஜெய்ஸ்வால் மாஸ் பேட்டி

0
372
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 246 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாவது நாளில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் குவித்து இருக்கிறது. தற்போது ஜடேஜா 81, அக்சர் படேல் 35 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த ஜோடி நாளை முதல் ஒரு மணி நேரம் விளையாடுவதாக இருந்தால், இந்திய அணி எப்படியும் 500 ரன்கள் கடந்து விடும். ஜடேஜா இந்திய மண்ணில் இன்னொரு டெஸ்ட் சதத்தை அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று ஆட்ட நேர முடிவில் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் வெளியேறி இருந்த ஜெய்ஸ்வால், இன்று ஜோ ரூட் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து, அதற்கடுத்து உடனே அதே ஓவரில் 80 ரன்களில் ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார்.

இது குறித்து இன்று பேசி உள்ள அவர் கூறும் பொழுது “சதம் அடித்திருந்தால் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும். இந்தியாவில் நான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் கூடுதல் சிறப்பு. ஆனால் நான் சதம் குறித்து யோசிக்கவில்லை. நான் எப்படி ரன்கள் அடிப்பது என்பது குறித்துதான் யோசித்து இருந்தேன். நான் அதை நோக்கிதான் விளையாடினேன்.

- Advertisement -

நான் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் விளையாடிய போது அது வேறு விதமான சூழலாக இருந்தது. தற்பொழுது இந்தியாவில் விளையாடுவது முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலாக இருக்கிறது. நான் எல்லா இடங்களிலும் என் விளையாட்டை ரசித்துதான் விளையாடுகிறேன். மேலும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த கிடைக்கும் எல்லா வாய்ப்பும் பெருமையானது.

இதையும் படிங்க : “கில் நீங்க இதை செய்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் இருக்க முடியும்” – கும்ப்ளே ஓபன் ஸ்பீச்

ஒரு கட்டத்தில் ஜோ ரூட் பந்தை வீசப் போகிறார் என்பது எனக்கு தெரியும். அவர் முதலில் வந்து பந்து வீசும்போது நான் அதற்கு தயாராக இருந்தேன். ஆனால் நான் முன்பே சொன்னது போல என்னால் முடிந்ததை நினைத்ததை செய்திருக்கிறேன். நான் சில சமயங்களில் தவறு செய்து வெளியேறலாம். ஆனால் நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தவறுகளில் இருந்து நான் கற்றுக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.