ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய டெஸ்ட் அணியில் இல்லையென்றே புரியவில்லை! – இயான் சேப்பல் காரணங்களுடன் கேள்வி!

0
133
Hardikpandya

நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களையும் வென்று அத்தோடு பார்டர் கவாஸ்கர் டிராஃபியையும் தக்கவைத்து, தொடரில் வலுவான முன்னிலையை பெற்றது!

இந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் திரும்பி வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

அதே சமயத்தில் அடுத்து நடக்கும் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் இல்லை என்றால் டிரா செய்ய வேண்டும். அப்படி நடந்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இல்லையென்றால் நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவை எதிர்பார்த்து இந்திய அணி காத்திருக்க வேண்டும்!

இந்திய ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு எடுபடவில்லை, அதே சமயத்தில் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் பேட்டிங்கும் எடுபடவில்லை. இவர்கள் இருவருமே தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி விட்டதால், ஸ்டார்க் மற்றும் ஹெட் அணிக்குள் திரும்பி வந்ததும், மேலும் விரலில் ஏற்பட்ட காயத்தால் வெளியில் இருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரா கிரீன் அணிக்குள் வந்ததும் ஆஸ்திரேலியா அணியை பலமாக்கி இருக்கிறது. இவரது வருகை இரண்டாவது வேகப் பந்துவீச்சாளருக்கான இடத்தை நிரப்புகிறது.

தற்பொழுது கேமெரூன் கிரீனை வைத்து ஆஸ்திரேலிய லெஜன்ட் இயான் சேப்பல் பேசும்பொழுது ” ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் இல்லை என்று எனக்குப் புரியவில்லை. அவரால் அவ்வளவு பந்து வீச முடியாது என்று மக்கள் என்னிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என் கேள்வி என்னவென்றால் இவர்கள் மருத்துவர்கள் இடமோ இல்லை கிரிக்கெட் வீரர்களுடனும் பேசி தெரிந்து கொண்டு தான் சொல்கிறார்களா?!” என்று கேள்வி எழுப்பி உள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசி உள்ள அவர்
” ஹர்திக் பாண்டியா விளையாட விரும்பினால் அவர் இந்திய பக்கத்தில் இருக்க வேண்டும். அவர் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் கண்ணியமாக பந்து வீசுகிறார். அவர் நல்ல ஃபீல்டரும் கூட. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் விளையாடும் டெஸ்ட் போட்டியில் சமநிலையை பெற வேண்டும் என்றால், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் அணியில் இருக்க வேண்டும். அதேபோல் இந்தியாவுக்கு ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். கேமரூன் கிரீன் ஆஸ்திரேலியா அணியில் இருப்பதால் இரண்டாவது வேகப் பந்துவீச்சாளருக்கான இடத்தை நிரப்பி, மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட முடியும்படி செய்கிறார்” என்று கூறியிருக்கிறார்!