“சூர்யா பாய் சொன்னத நான்தான் கேட்கல.. எங்க திட்டம் இதுவாதான் இருந்தது!” – இஷான் கிஷான் அதிரடி பேச்சு!

0
3489
Ishan

இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களை மிகவும் ஏமாற்றம் அடைய வைத்து வருத்தப்பட வைத்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி குறித்து இந்திய ரசிகர்களுக்கு பெரிதான ஆர்வம் எதுவும் இருக்கவில்லை.

- Advertisement -

ஆனால் போட்டி நடைபெற்ற விசாகப்பட்டினம் மைதானத்தில் பெரிய அளவில் திரண்டு வந்திருந்தார்கள். மேலும் இந்திய அணிக்கு மைதானத்தில் மிகச்சிறந்த ஆதரவை அவர்கள் கொடுத்தார்கள்.

அதே சமயத்தில் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு பெரிய ஆர்வம் காட்டாமல் இருந்த இந்திய ரசிகர்கள், போட்டி கொஞ்சம் கொஞ்சமாக சென்ற விதத்தில், போட்டியை முழுவதுமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆஸ்திரேலியா முதலில் விளையாடி மூன்று விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுக்க, இதற்கு அடுத்து விளையாடிய இந்திய அணி எட்டு விக்கெட் இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் இரண்டு விக்கெட் சீக்கிரம் விழுந்துவிட, இஷான் கிஷான் மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதிரடியாக அமைத்து அணியின் வெற்றிக்கு முக்கியமாக இருந்தார்கள். இசான் கிசான் அரை சதம் அடித்தார்.

வெற்றிக்குப் பின் பேசிய இசான் கிசான் கூறும்பொழுது ” பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக நான் உணர்கிறேன். நாங்களும் அழுத்தத்திற்கு உள்ளானோம். ஆனால் முகேஷ் குமார் மிகச் சிறப்பாக பந்து வீசினார். இந்த விக்கெட்டில் பந்து வீசுவது எளிதானது கிடையாது. ஆனால் ஓவருக்கு ஒன்பது ரன்கள் வீதம் அவர்களை வைத்திருந்தது சிறப்பானது.

ரிங்கு சிங் அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் விளையாடியது போன்ற ஒரு இன்னிங்ஸை இன்றும் விளையாடி காட்டினார். நாங்கள் பின்னாடி வரும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை.

சூர்யா பாய்க்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும். அவர் தனது இன்னிங்ஸை மிகச் சிறப்பாக திட்டமிட்டார். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் பெரிய ஷாட்களை விளையாட முடியும். எங்கள் பார்ட்னர்ஷிப்பை அதிரடியாக அமைப்பதே எங்கள் திட்டம்.

இதனால் நான் அவுட் ஆனாலுமே ஸ்கோர் போர்டில் எங்களுக்கு ரன்கள் வரவேண்டும். நான் அவுட் ஆன பந்தில் சூர்யா பாய் என்னிடம் சிங்கிள் எடுக்க சொன்னார். ஆனால் எடுக்க வேண்டிய ரன்னுக்கும் பந்துக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததால் நான் அடித்து விளையாட சென்றேன்.

நாங்கள் மிகவும் இளமையான அணி. நாங்கள் இது போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடவில்லை. இதனால் நாங்கள் ஆட்டத்தில் தவறுகள் செய்வோம். ஆனால் அது குறித்து நாங்கள் டீம் மீட்டிங்கில் பேசுவோம். மேலும் நாங்கள் அடுத்து போட்டியில் சிறப்பாக பந்து வீசுவோம்!” என்று கூறியிருக்கிறார்!