“முதல் டெஸ்ட் போட்டியில் எனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை”…
“ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் உள்ளன”.- மனம் திறந்த ஆஸ்திரேலியா வீரர்!

0
426

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது . நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது .

இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற ஒன்றாம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது. சிறிது கால ஓய்விற்கு பின் வீரர்கள் பயிற்சிக்கு திரும்பி இருக்கின்றனர். ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஹெசல் வுட் ஆகியோரின் காயம் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது . கேப்டன் பேட் கமின்ஸ் தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார். இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத நிலையில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் உடல் தகுதிக்கு திரும்பி இருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பந்து வீச்சு பலமாக உள்ளது. அஸ்வின் ஜடேஜா.சமி ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பேட்டிங்கை பொறுத்த வரை கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பார்முக்கு திரும்புவார்கள் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன டிராவஸ் ஹெட் முதல் போட்டியில் தன்னை அணியில் இருந்து நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். சமீப காலமாக ஆஸ்திரேலியா அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த ஹெட் இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. சுழற் பந்துவீச்சாளருமான அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியா அணியை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஹெட்” அணியில் இருந்து என்னை நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் சில நேரங்களில் அப்படி நடக்கும் . என்னை நீக்கிய பிறகு அடுத்த வாய்ப்புக்காக தீவிரமாக பயிற்சி செய்தேன். டெல்லி டெஸ்ட் போட்டியில் அணியில் மீண்டும் இடம்பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர்” ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் இது தொடர்பாக என்னிடம் விவாதித்தது. நானும் என்னுடைய கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனக்கு அணியின் பயிற்சியாளர்களுடன் நல்ல நட்புறவு இருக்கிறது . என்னுடைய கருத்தை பகிர்வதற்கும் முழு சுதந்திரம் கொடுத்தார்கள்”என்று தெரிவித்தார்.

இது பற்றி தொடர்ந்து பேசிய ஹெட் ” அனிக்காக இந்த பேட்டிங் பொசிஷனிலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறினார். டேவிட் வார்னர் காயம் அடைந்த நிலையில் அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது எண்ணில் துவக்க வீரராக களம் இறங்கினார். அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டால் தொடர்ந்து துவக்க வீரராக ஆடை இருப்பதாகவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியா அணிக்காக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமே தான் சிந்திப்பதாகவும் அதற்கு எந்த இடத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறி முடித்தார் ஹெட்.