2008ஆம் ஆண்டு தோனி என்னை அணியை விட்டு நீக்கியவுடன் நான் ஓய்வு பெற முடிவு செய்தேன் ; என்னைத் தடுத்தது இவர் தான் – உண்மையை உடைத்த சேவாக்

0
148
MS Dhoni and Virender Sehwag

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கிரிக்கெட்டில் குறுகிய ஓவர் போட்டிகளுக்கு புதிய விதிகள் வகுக்குப்பட்டு, பகல் இரவு ஆட்டங்கள் என கிரிக்கெட் நவீனம் அடைந்த பின்னர். நவீன கிரிக்கெட்டில் சச்சின்-கங்குலி துவக்க பேட்டிங் கூட்டணி எந்தளவிற்கு புகழ் வாய்ந்ததோ அதே அளவிற்கு சச்சின்-சேவாக் கூட்டணியும் புகழ் வாய்ந்தது.

இன்றைய பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலியால் அடையாளம் காணப்பட்டு நம்பிக்கை அளிக்கப்பட்டு உருவானவர் டெல்லி வீரரான வீரேந்திர சிங். அவரால் துவக்க வீரராக அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒரு துவக்க வீரராக மாறிப்போனவர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சச்சினுக்குப் பிறகு இரட்டை சதம் அடித்த வீரர், முதல் பந்தில் இருந்தே தாக்குதல் பாணி ஆட்டத்தை பயமின்றி ஆடும் வீரர் என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்கள் கண்ட ஒரே வீரராக இவர் மட்டும்தான் இன்றளவும் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலளவில் மூன்று முச்சதங்கள் அடித்த வீரர் என்கிற அரிய சாதனை நூலிழையில் தவறியும் இருக்கிறது.

- Advertisement -

நவீன கிரிக்கெட் காலத்தை எடுத்துக்கொண்டால் இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களான சச்சின், கங்குலி, டிராவிட், லஷ்மணன் வரிசையில் வீரேந்திர சேவாக்கிற்கும் ஒரு மதிப்புமிக்க இடம் இருக்கவே செய்கிறது. சமீபத்தில் அவரிடம் தற்போது பேட்டிங் பார்ம் சரிந்திருக்கும் விராட்கோலியின் ஓய்வு பற்றிக் கேட்டபொழுது, 2008 ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் தனக்கு நடந்ததை வைத்து விளக்கம் கூறியிருக்கிறார்.

தோனி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காகத் தலைமையேற்று இருந்த 2008 காலக்கட்டத்தில் இந்திய அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலியா சென்று, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளையும் பெற்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றி வந்தது. அந்தந் தொடரில் வீரேந்திர சேவாக் முதல் நான்கு ஆட்டங்களில் 6, 33, 11, 14 என்று எடுக்க, கேப்டன் மகேந்திர சிங் தோனி வீரேந்திர சேவாக்கை ஆடும் அணியிலிருந்து நீக்கிவிட்டார். இந்தச் சமயத்தில் டெஸ்டில் மட்டும் ஆடுவோம், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விடுவோம் என்று நினைத்தவர், இதுபற்றி சச்சினிடம் ஆலோசனையும் செய்திருக்கிறார்.

இதுபற்றி மேலும் கூறிய சேவாக் “அப்பொழுது நான் இதுகுறித்து சச்சினிடம் ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அவர் ‘இது உனக்கு கடினமான காலக்கட்டம். எல்லோருக்கும் வருவதுதான். பொறுமையாக இரு சரியாகும்’ என்று கூறினார். பின்பு நான் பொறுமையாய் இருந்து அந்தச் சரிவில் இருந்து மீண்டு வந்தேன்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

- Advertisement -

அதில் அவர் “கிரிக்கெட்டில் இரண்டு வகையான வீரர்கள் இருக்கிறார்கள். ஒருவகையினர் எல்லா விமர்சனங்களுக்கும் காதைக்கொடுத்து, அந்த விமர்சனங்களுக்கு தங்கள் சிறந்த ஆட்டத்தின் மூலம் பதிலடி தர விரும்புகிறவர்கள். விராட்கோலி இந்த வகை வீரர். அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்டிங்கின் மூலம் பதிலடி தர எண்ணுகிறார். இன்னொரு வகை வீரர்கள், அமைதியாக அந்த நாளின் முடிவில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யக்கூடியவர்கள். நான் இரண்டாவது வகை வீரர். விராட்கோலி தன் பாணியில் திரும்பி வருவார்” என்று கூறியிருக்கிறார்!