“டிராவிட்கிட்ட பேசிட்டுதான் இதை செஞ்சேன்” – ரோகித் செய்த யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள்!

0
313
Rohit

14 மாதங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்பி இருக்கும் ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சில தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

மேலும் இந்த போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேயிங் லெவனில் நிறைய ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடைபெற்று இருந்தது. வெளியில் இருந்து எல்லோரும் கணித்ததற்கு மாறாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கில் களமிறங்குகிறார். மேலும் மூன்றாவது இடத்தில் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு தரப்படும் என்று எல்லோரும் கணித்த பொழுது திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தொடர்கிறார்.

- Advertisement -

இதில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயமாக பேட்டிங் யூனிட்டில் சிவம் துபே சேர்க்கப்பட்டிருக்கிறார். அடுத்து பவுலிங் யூனிட்டில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், மற்றும் ரவி பிஷ்னாய் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

டாஸ் நிகழ்வில் பேசிய கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம் ஆனால் இதற்கு குறிப்பிட்ட எந்தக் காரணமும் கிடையாது. இங்கு ஆடுகளம் மிகவும் நன்றாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு அதிக டி20 போட்டிகள் இல்லை. ஐபிஎல் தொடர் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் ஐபிஎல் வேறு சர்வதேச டி20 போட்டிகள் வேறு.

இது ஒரு சர்வதேச விளையாட்டு. முன்னோக்கி செல்வது மற்றும் நம் குழுவாக சிந்திப்பது என என்ன செய்ய வேண்டும் என்று நான் ராகுல் டிராவிட் பாயுடன் பேசினேன். அதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கப் போகிறோம். பரிசோதனை முயற்சிகள் இருந்தாலும் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்!