“என்னால போட்டிக்காக காத்திருக்க முடியல.. அதை நினைக்கிறப்பவே..!” – விராட் கோலி தைரியமான பேச்சு!

0
836
Virat

இன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானம் ரசிகர்களால் நிரம்ப, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி உலகக் கோப்பை தொடரில் நடைபெற இருக்கிறது!

இந்த ஒரு போட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் பல எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிலவுகிறது. இரு அணிகளுக்கும் இரு வேறு விதமான அழுத்தங்களும் நெருக்கடிகளும் இருக்க செய்கின்றன.

- Advertisement -

இந்தப் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஹோட்டல்கள் கிடைக்காமல் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக பதிவு செய்து தங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் பெரிய நகரங்களில் சாலைகள் வெறிச்சோடுகின்றன. அந்த அளவிற்கு எதிர்பார்ப்பும் உற்சாகமும் குதுகலமும் இந்த போட்டியைக் குறித்து நிரம்பி வழிகிறது.

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் கதாநாயகனாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இதுவரை நடைபெற்றுள்ள ஏழு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மோதல்களில் அவர் மூன்று முறை ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார்.

இதற்கு அடுத்து மிக முக்கியமான இடத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதலில் குறிப்பாக உலகக்கோப்பையில் விராட் கோலி இருந்து வருகிறார். அவர் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

அதே சமயத்தில் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மெல்போர்ன் மைதானத்தில் யாராலும் நம்ப முடியாத ஒரு அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸ் அது.

இந்த நிலையில் விராட் கோலி இந்தியா பாகிஸ்தான் மோதல்கள் குறித்து கூறும்பொழுது “இது போன்ற ஆட்டங்கள் முன்னோடியாக இருப்பதுதான் அதன் சிறப்பு. மெல்போர்ன் போட்டியின் போது ஹோட்டலில் இருந்த சலசலப்பு, மற்றும் மைதானத்திற்குள் இருந்த சலசலப்பு ஆச்சரியமாக இருந்தது. நான் ஆடுகளத்தில் இறங்கிய அந்தத் தருணம் அந்த ஆற்றலை உணர்ந்தேன்.

ஆனால் இந்த முறை குஜராத் அகமதாபாத்தில் நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில், மெல்போனை விட மிக அதிகபட்சமாக எல்லாம் அமையும் என்று நினைக்கிறேன். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஆரவாரம் செய்வார்கள்.

என்னால் இதற்காக காத்திருக்க முடியவில்லை. இது மிகவும் உற்சாகமான தருணம். இந்த சூழலை அனுபவிப்பது அற்புதமான ஒன்று. டி20 உலகக் கோப்பையில் அப்படியான ஒரு சூழலில் அங்கமாக இருந்தது என்னுடைய பாக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!