விராட் கோலியின் வேகம் தீவிரத்தோடு என்னால் இருக்க முடியாது – யுவராஜ் சிங் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ஆச்சரிய தகவல்!

0
412
Yuvraj singh

மாநில அளவில் ஹைதராபாத் அணிக்காக 1989 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் ராமகிருஷ்ண ஸ்ரீதர். இடது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளர் ஆவார்!

இவர் ஆந்திரா மற்றும் இந்திய அண்டர் 19 அணிகளுக்கு ஃபீடிங் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு முதல் இவர் இந்திய அணிக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

- Advertisement -

இவருடைய பணிக்காலத்தில்தான் மகேந்திர சிங் தோனி தலைமையில் இரண்டாவதாக ஒரு புதிய இந்திய அணி கட்டமைக்கப்பட்டது. துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா மேலே சென்றார், மூன்றாவது இடத்தில் விராட் கோலி ஜொலிக்க ஆரம்பித்தார். இப்படி சச்சின், சேவாக், கம்பீர் போன்றவர்கள் விடைபெற தோனி தலைமையில் மீண்டும் புதியதாக இந்திய அணி கட்டமைக்கப்பட்டிருந்த நேரம் அது!

இவர் தற்போது இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார் மேலும் இவர் அந்த காலத்தில் நடைபெற்ற பல சுவாரசியமான சம்பவங்களை குறிப்பிட்டு வருகிறார்.

அதில் ஒன்றாக யுவராஜ் சிங் பற்றி பேசி உள்ள இவர் ” 2016 ஆம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டிக்கு முன்பு நாங்கள் ஆஸ்திரேலியா அடிலைடு மைதானத்தில் பயிற்சியில் இருந்தோம். நான் அப்போது விராட் கோலிக்கு பீல்டிங் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். அவர் கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது எங்களை நோக்கி வந்த யுவராஜ் சிங் எங்களோடு இணைவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் எங்களைத் தாண்டிச் சென்று நாங்கள் செய்வதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்” என்று கூறியவர்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து ” விராட் கோலி தனது பயிற்சியை முடித்துக் கொண்டு கிளம்பியவுடன் யுவராஜ் சிங் என்னிடம் வந்தார். அப்போது அவர் என்னுடன் பேசும் பொழுது, விராட் கோலியின் வேகம் மற்றும் தீவிரத் தன்மைக்கு ஈடு கொடுத்து என்னால் பயிற்சி செய்ய முடியாது அதனால் நான் ஒதுக்கி இருந்து என்னுடைய வேகத்தில் பயிற்சி செய்யலாம் என்று காத்திருந்தேன் என்று கூறினார்” என்று தெரிவித்தார்…

இதற்கு அடுத்து மேலும் இதைப் பற்றி பேசிய அவர் ” அவர் எப்படி இருந்து உருவாகி வந்திருக்கிறார் என்பது எனக்கு முதல் போட்டியில் அவர் ஹர்திக் பாண்டியா ஓவரில் ஷார்ட் கவரில் வைத்து கிரீஸ் லின்னை அவுட் ஆக்கிய போது தெரிந்தது. அவர் சொந்தமான பயிற்சியின் மூலம் உருவாகி வந்தவர் ” என்று பெருமையாக கூறியிருக்கிறார்!