“இந்தியா கூட நடந்ததை என்னால மறக்கவே முடியாது.. ஆனா அது தான் என்னை உருவாக்குது!” – ஷாகின் அப்ரிடி சிறப்பு பேட்டி!

0
3604
Shaheen

பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்திருக்கிறது.

தற்பொழுது தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

- Advertisement -

நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான அணி அரை இறுதிக்கு கட்டாயம் தகுதி பெறும் அணியாக பல கிரிக்கெட் வல்லுனர்களாலும் பார்க்கப்பட்டது.

ஆனால் இதெல்லாம் ஆசிய கோப்பை தொடர் நடைபெறும் வரையில்தான் இருந்தது. ஆசியக் கோப்பைத் தொடர் நடந்து முடிந்த பிறகு பாகிஸ்தான அணி அரையிறுதிக்கு தகுதி பெறுகின்ற சதவீதம் குறைய ஆரம்பித்தது.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவுக்கு எதிரான போட்டி பற்றி பேசிய பொழுது ” இந்தியாவுக்கு எதிரான அந்த ஆட்டம் எனக்கு நினைவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் விளையாட நான் தேர்வு செய்யப்படவில்லை. முந்தைய நாள் இரவு அணியில் இருந்தேன். ஆனால் அடுத்து டாஸ் போடப்படுவதற்கு முன்பு நான் அணியில் இல்லை.

- Advertisement -

இது அணியின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நகர்ந்தார்கள். அது எனக்கு மிகவும் ஏமாற்றமான ஒன்றாக அமைந்தது. அதற்கு முந்தைய போட்டியில் நான் நன்றாக விளையாடி அடுத்த போட்டியில் கட்டாயம் இருப்பேன் என்று நம்பி இருந்தேன்.

இப்படி இருந்து நான் இந்தியாவுக்கு எதிரான போட்டியை தவறவிட்டேன். இதனால் எனக்கு கோபமும் வந்தது. இது தனிப்பட்ட ஆட்டம் இல்லை என்பதால் அணிக்காக சிலவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கிடைத்தது. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த போட்டியில் விளையாடுவதும் சிறிய அணை பெரிய அணி என்று கிடையாது.

அந்தக் குறிப்பிட்ட கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் என்னை உருவாக்கியது. வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது. அந்த உலகக் கோப்பை தொடரை என் வாழ்க்கையை உயர்த்திய ஒரு தொடராக நான் பார்க்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!