“நேற்று இந்திய அணியில் இந்த ஐடியாவை யார் கொடுத்திருந்தாலும் அவங்கள பாராட்டுறேன்” – ஜாகிர் கான் பேச்சு

0
1065
Zaheer

இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்பை நேற்று ஆப்கானிஸ்தான் அணி மிக மிக நெருங்கி வந்து இழந்தது.

இந்தியா ரோகித் சர்மா மற்றும் ரிங்கு இருவரது அதிரடியான பேட்டிங் காரணமாக 212 ரன்கள் குவித்தது. திருப்பி இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இந்த ரன்களை எடுத்து போட்டியை டை ஆக்கியது. இந்த இடத்திலும் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து நடந்த இரண்டு சூப்பர் ஓவர்களிலும் ஆப்கானிஸ்தான் அணியின் கைகளே ஓங்கி இருந்தது. குறிப்பாக இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணியை 5 பந்துகள் மட்டும் விளையாட விட்டு 11 ரன்களில் மடக்கியது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் போல் சிறிய மைதானத்தில் 6 பந்துகளில் 12 ரன்கள் என்பது பெரிய கடினமான காரியம் கிடையாது. எனவே இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்றே கூறலாம்.

இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரை வீசுவதற்கு முன்னால் ஆபீஸ் கான் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரது கைகளிலும் பந்து இருந்தது. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா ரவி பிஸ்னாய் பந்து வீசுவதை முடிவு செய்தார். இந்த முடிவு ரோகித் சர்மா முடிவு என ராகுல் டிராவிட்டும் போட்டிக்கு பின் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் கூறும்போது “இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் துணிச்சலான முடிவு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அந்த சூழ்நிலையில் உங்களுக்கு முடிவெடுப்பதற்கு அதிக நேரம் கிடையாது. நீங்கள் உங்களுடைய உள்ளுணர்வு மற்றும் சிந்தனையை நம்பி போக வேண்டும். இந்திய அணியின் சிந்தனைக் குழுவில் இந்த முடிவை யார் எடுத்திருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டும்.

இரண்டாவது சூப்பர் ஓவர் மிகவும் சிறப்பாக தொடங்கியது. ரோகித் சர்மா ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்திய அணி முழுதாக 6 பந்துகளை சந்திக்காமல் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த இடத்தில் அடுத்த ஆறு பந்துகளை யார் வீசுவது? என்கின்ற பெரிய முடிவை எடுக்க வேண்டியது இருந்தது. ஆனால் அந்த முடிவு மிகச் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டது. ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் வெகு எளிதாக 12 ரன்கள் எடுக்கிறார்கள். இதனால் அழுத்தம் காரணமாக அந்த இடத்தில் பந்துவீச்சாளர்கள்தான் தவறு செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.