“செமி பைனலில் இந்தியாவை சந்திக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்.. காலம் சொல்லும்!” – ஆட்டநாயகன் போல் அதிரடி பேச்சு!

0
3676
Boult

இன்று உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்வதற்கான மிக முக்கியமான போட்டியில், இலங்கை அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பெங்களூரில் விளையாடியது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்று பந்துவீசிய நியூசிலாந்து அணி இலங்கை அணியை 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு சுருட்டியது. நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 10 ஓவர்களில் 3 மெய்டன்கள் செய்து, 37 ரன்கள் தந்து, 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு கான்வே 42, ரவீந்தரா 45, மிட்சல் 43 ரன்கள் எடுக்க 23.2 ஓவரில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு நல்ல ரன் ரேட் கிடைத்திருக்கிறது. எனவே பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியில், பாகிஸ்தான் நினைத்துப் பார்க்க முடியாத வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே நியூசிலாந்து அணி 99 சதவீதத்திற்கும் மேல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்று சொல்ல வேண்டும். புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியுடன் அரையிறுதியில் மும்பை மைதானத்தில் மோதுவது உறுதி.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த தோல்வி இதுவரை இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற போல்ட் பேசும்பொழுது “புதிய பந்தில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் வென்றாக வேண்டிய பெரிய போட்டியில் வெற்றி பெற்றது மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இங்குள்ள கண்டிஷனில் புதிய பந்தில் வீசுவது சவாலான ஒன்று. இன்று எனது அனுபவத்தை பயன்படுத்தி செயல்பட்டு இருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்த நாளில் சிறந்த ஒரு அணியின் பக்கத்தில் இருப்பது நல்லது.

இந்தியாவில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமான சூழ்நிலைகளை சந்தித்து விளையாடுவதுதான் மிகப்பெரிய சவாலான விஷயம்.

தற்பொழுது இந்திய அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அரை இறுதியில் என்ன நடக்கும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் நான் இந்தியாவுக்கு எதிராக விளையாட மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்!