“இதுக்கு மேல கேட்க நான் பேராசைக்காரன் இல்லைங்க!” – டெம்பா பவுமா குதுகல பேச்சு!

0
2487
Bavuma

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் லக்னோவில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தி அசத்தியிருக்கிறது!

இன்று இரண்டு அணிகளும் தங்களுடைய இரண்டாவது நடப்பு உலகக் கோப்பை போட்டியில் களம் இறங்கின. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இலங்கையை வென்றிருக்க, ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.

- Advertisement -

முதலில் டாஸ் இழந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் சதத்துடன் ஏழு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக மேக்ஸ்வெல் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டும் தந்து 2 விக்கெட் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் ஒருவர் கூட அரை சதம் அடிக்க வில்லை. லபுஷேன் மட்டும் 46 ரன்கள் எடுத்தார். 40.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு சுருண்டு 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய தோல்வி அடைந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்கு சரிந்தது.

தற்பொழுது இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசும் பொழுது “இங்கு 290 முதல் 300 ரன்கள் சரியாக இருக்கும். நாங்கள் கூடுதலாகவே ரன்கள் எடுத்து இருந்தோம். டாஸ் தோற்றதில் மகிழ்ச்சி. அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

- Advertisement -

எல்லாப் பாராட்டும் குயிண்டனுக்கே சேரும். நாங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் இருக்கிறது என்று நான் சொன்னால் அது பெரிய பேராசையாக அமைந்துவிடும்.

பேட் மற்றும் பந்தின் மூலமாக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். போட்டியின் அனைத்து கட்டங்களையும் பார்த்து வீரர்களே அவரவர் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இன்று தனிப்பட்ட வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை நாங்கள் ரசிப்போம். பின்னர் நாங்கள் நாளை ஒரு குழுவாக திரும்ப வந்து அடுத்த செய்ய வேண்டியது குறித்து யோசித்து செயல்படுவோம்!” என்று கூறியிருக்கிறார்!