“நான்தான் NO.1 ஸ்பின்னர்.. அடுத்து நடக்க போறத பாருங்க!” – மேக்ஸ்வெல் அதிரடியான பேட்டி!

0
67
Maxwell

நடப்பு உலக கோப்பையில் பலமிக்க அணிகளாக பார்க்கப்பட்ட அணிகளில் ஆஸ்திரேலியா அணியும் ஒன்று. பந்துவீச்சு அடிப்படையில் எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து விட உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பைக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக முக்கிய வீரர்கள் காயமடைந்து பெரிய பின்னடைவை கொடுத்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதிரடியாக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட் கடைசி நேரத்தில் காயமடைந்தார்.

- Advertisement -

மேலும் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் இடது கை சுழற் பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகர் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமான பந்துவீச்சாளராக கருதப்பட்டார். அவர் கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த இரண்டு வீரர்களும் கிடைக்காமல் போனது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது ஸ்பின்னர் ஆக அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியில் குறிப்பிடப்படுகிறார். அவரை பகுதி நேர பந்துவீச்சாளராக பார்க்க கூடாது என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளரும் கேட்டுக் கொண்டிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள மேக்ஸ்வெல் “2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் தான் அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ஆக இருந்தேன். பின்பு நான் இரண்டாவது ஸ்பின்னர் ஆக மாறினேன். பந்து கையில் இருந்து நன்றாக வருகிறது. நான் குறிப்பிட்ட எதிலும் வேலை செய்யவில்லை. பந்தை ரிலீஸ் செய்யும் பொழுது நான் நன்றாக உணர்கிறேன்.

கடைசி போட்டியில் இரண்டு ஓவர்கள் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நான் பந்தின் மீது ஐந்து விரல்களையும் கொண்டு பிடித்தேன். அப்படியே போய் பேட்ஸ்மேனுக்கு ஒரு பவுன்சர் வீசி விடக்கூடாது என்று நினைக்கிறேன்.

லக்னோ மைதானத்தை பொதுவாக முழுவதுமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஐபிஎல் தொடருக்கு புதிதாக தொடங்கினார்கள். இந்தியாவுக்கும் இங்கே ஒரு டி20 கடைசியாக இருந்தது. நியூசிலாந்து அடித்த 99 ரன்களை அவர்கள் துரத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

லக்னோவில் அடுத்த சில கேம்களில் என்ன கண்டிஷன்கள் இருந்தாலும் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் இங்கு விளையாடவதற்கு அதிர்ஷ்டசாலிகள். எனவே என்ன மாதிரி நிலைமைகள் இருக்கிறது என்று பார்ப்போம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -