சீரியஸா சொல்றேன்.. பாகிஸ்தான் 450 ரன் அடிச்சு இங்கிலாந்தை 100 ரன்னில் சுருட்டலாம்.. இது மட்டும் பண்ணினா.. அமீர் அதிரடி பேட்டி!

0
5037
Amir

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் நான்கு அணிகளுக்கான இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

இந்த நிலையில் நான்காவது அணியாக நியூசிலாந்து அணி வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பை அறிவிக்க முடியாத நிலைக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு இருக்கும் 1 சதவீத அரையிறுதி வாய்ப்பு தடுக்கிறது!

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் தங்களின் எட்டாவது போட்டியின் முடிவில் நான்கு வெற்றி மற்றும் நான்கு தோல்விகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து இருந்தன. நியூசிலாந்து அணி ரன் ரேட்டில் கொஞ்சம் பாகிஸ்தானை விட அதிகமாக இருந்தது.

ஆனால் நியூசிலாந்து தனது கடைசி லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக 23 ஓவர்களில் இலக்கை எட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் தற்பொழுது நியூசிலாந்து அணி +0.743 என ஆரோக்கியமாக இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் +0.036 என நியூசிலாந்தை விட மிகக் குறைவாக இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து குறைந்தபட்சம் 275 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனவே நாளை பாகிஸ்தான் அணி போட்டிக்கு முன்பாக டாசை வெல்வது போட்டியை வெல்வது போல முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இப்படியான ஒரு சுவாரசிய உள்ளடக்கம் போட்டிக்குள் இருக்கின்ற காரணத்தினால் நாளைய போட்டிக்கும் முக்கியத்துவம் உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமீர் கூறும் பொழுது “பாகிஸ்தான் 400-450 ரன்கள் எடுக்கலாம் இங்கிலாந்தை 100 ரன்களில் சுருட்டலாம். பகார் ஜமான் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியதைப் போல விளையாடினால் இது கட்டாயம் சாத்தியமாகும். உங்களுக்கு கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்று தெரியாது. எனவே நான் இதை சீரியஸ் ஆகவே சொல்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!