உலக கோப்பைக்கு நானே செலக்ட் ஆகல.. குழப்பும் ரோகித்.. அணியில் என்ன நடக்கிறது?

0
9330
Rohitsharma

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிவுடன் அவர்களது நாட்டில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆரம்பித்து 23ஆம் தேதி முடிகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி ஆகஸ்ட் முப்பதாம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் துவங்கும் ஆசிய கோப்பையில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இது மிகவும் முக்கியமான தொடராகும்.

இந்த நிலையில் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரது காயம் எந்த நிலையில் இருக்கிறது என்பது கேள்வியாக இருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து கேட்கப்பட்ட பொழுது கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“யாரும் தானாக தேர்வு ஆக முடியாது. யாருக்கும் இடம் என்பது உத்திரவாதம் கிடையாது. நானும் தானாக தேர்வாக முடியாது. இப்படியான விஷயத்தில் நம்மால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. சில வீரர்கள் ஆசிய கோப்பைக்கு செல்வார்கள் என்று தெரியும். இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சில வீரர்கள் விளையாடுவதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிய கோப்பையில் நாங்கள் சரியான எதிரணிகளுடன் விளையாட வேண்டியதாக இருக்கும்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் நான்கு மாதங்களாக எதுவும் விளையாடாமல் இருந்து வருகிறார்கள். பெரிய காயங்களால் இருவருக்கும் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இந்தக் காயத்தின் தன்மை மற்றும் மறுவாழ்வு பற்றி எனக்கும் தெரியும். ஏனென்றால் எனக்கும் இப்படியான அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்னவென்று பார்க்க வேண்டும். மேலும் அனைவருமே தங்களது இடத்திற்காக போராட வேண்டும்.

நாம் வெற்றி பெற விரும்புகிறோம். ஆனால் அதே நேரத்தில் பல கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது. ஆசியக் கோப்பையில் பலமான எதிரணிகளிடம் நமது அணியின் சில வீரர்கள் அழுத்தத்தின் கீழ் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அழுத்தம் என்பது எப்பொழுதும் இருப்பதுதான். மேலும் அணி ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே நம்பி இருக்காமல், நிறைய பெயர்களை கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவை சரியான நேரத்தில் பொருந்தி வரும் என்று நம்புகிறேன். இதுதான் மிகவும் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!