“இந்த சீசன் என்னவாக இருக்கிறது என்பதில் நான் எதிர்பார்த்து இருக்கிறேன்” – ரிக்கி பாண்டிங் சூசகமான பதில்!

0
67

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் துவங்க இருக்கிறது இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலபரிட்சை நடத்துகின்றன

போட்டித் தொடர் நெருங்கி வருவதை முன்னிட்டு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருப்பதால் ரசிகர்கள் இப்போது இருந்தே போட்டியின் மனநிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர் .

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் சிறிதளவு பின்னடைவை சந்தித்த அணிகளில் குறிப்பிடத்தக்கது டெல்லி கேப்பிட்டல். அந்த அணியின் கேப்டன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான ரிஷப் பண்ட் வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் சில காலம் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் அனுபவம் வாய்ந்த கேப்டனான டேவிட் வார்னர் தற்போது டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அந்த சந்திப்பின்போது தங்களது அணியினுடைய புதிய தொடக்கம் பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார். இந்த வருட போட்டியிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல முயற்சிப்போம் என கூறினார் ரிக்கி பாண்டிங்.

மேலும் தொடர்ந்து பேசிய ரிக்கி பாண்டிங் சில பரிச்சயமான முகங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. சில புதிய வீரர்கள் மற்றும் புதிய முகங்களை அணியில் சேர்த்துக் கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் என அற்புதமான நேரங்கள் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன என தனது பேட்டியை முடித்துக் கொண்டார் ரிக்கி பாண்டிங்.

- Advertisement -

டெல்லி அணி வருகின்ற சனிக்கிழமை கே எல் ராகுல் தலைமையிலான லக்னம் சூப்பர் ஜேம்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக சர்பராஸ் கான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவு வீரரான ரோமன் பாவல் நல்ல ஃபார்மில் இருக்கிறார் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரின் பங்களிப்பு டெல்லி அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.