“என்ன நடந்தாலும் நான் இப்படித்தான் ஆட போறேன்.. சாதனைக்கு ஆடமாட்டேன்!” – ஆட்டநாயகன் ரோகித் சர்மா சபதம்!

0
1977
Rohit

இன்று இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 272 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு 63 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து அற்புதமான துவக்கத்தை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொடுத்தார்.

இறுதியாக ரோகித் சர்மா 131 ரன்கள் எடுத்து வெளியேற, களத்தில் நின்ற விராட் கோலி 55 ரன்கள் எடுத்து அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் தற்பொழுது இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதல் இடத்தில் நியூசிலாந்து அணி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட். எனது இயல்பான ஆட்டத்தை ஆட நான் விரும்புகிறேன். நான் சிறிது நேரம் நின்றால் எனக்கு ஆட்டம் இயல்பாகிவிடும். நான் கொஞ்ச காலமாக இதற்கு வேலை செய்து வருகிறேன். சதம் அடிப்பது சிறப்பானது. ஆனால் நான் ரெக்கார்டுகள் குறித்து அதிகம் யோசிப்பதே இல்லை.

ஏனென்றால் நான் முன்னோக்கி செல்ல நீண்ட தூரம் இருக்கிறது. எனவே நான் என் கவனத்தை இழக்காமல் இருக்க வேண்டும்.மேலும் என்ன தேவை என்பதை நான் அறிவேன். இது போன்ற நாட்களில் அதை கணக்கிட வேண்டும்.

என்னுடைய ஆட்டத்தில் சிலவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை. எல்லா நேரமும் பெரிய ஷாட்கள் விளையாட முடியாது. சில நேரம் நீங்கள் உங்கள் உள்ளுணர்வின் படி செயல்படுகிறீர்கள். இது இரண்டும் கலந்த கலவை.

அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வது என்னுடைய பொறுப்பு என்று எனக்கு தெரியும். இது நான் சில காலம் விரும்பி செய்த ஒன்று. அது வேலை செய்யும் பொழுது நன்றாக இருக்கும். இது எப்பொழுதுமே வேலை செய்யாது. ஆனால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க நான் என்னை இப்படியே வைத்துக் கொள்ள விரும்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!