இவங்க 3பேர டீம்ல வைக்கலனா நான் காலி.. சாய் சுதர்சன் தகுதியான ஆளு” – கேப்டன் கேஎல்.ராகுல் பேச்சு!

0
1483
Rahul

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் தற்பொழுது கே.எல் ராகுல் தலைமையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் சுழற் பந்துவீச்சு எடுபடும் என்கின்ற காரணத்தினால் இந்த முடிவை அந்த அணி எடுத்திருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சில் முழுக்க புதியவர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் பேட்டிங் வரிசையில் இரண்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆச்சரியப்படுத்தும் விதமாக சஞ்சு சாம்சன் அணியில் எடுத்ததும் இடம்பெற்று இருக்கிறார். ஏனென்றால் கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு அறிமுகப் போட்டியில் ள் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ருத்ராஜ், திலக் வர்மாவும் இடம் பெற்று இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் மற்றும் குல்தீப் வருகிறார்கள். வேகப்பந்து வீச்சில் அர்ஸ்தீப், முகேஷ் குமார் ஆவேஷ் கான் இருக்கிறார்கள்.

- Advertisement -

டாஸ் நிகழ்வுக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் பொழுது “டிவியில் நிறைய பிங்க் நிற போட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். கடைசி டி20 போட்டி இங்கு நடைபெற்றது. எனவே அதன் அடிப்படையில் டாஸ் வெற்றி பெற்றிருந்தால் நானும் பேட்டிங்கை தேர்வு செய்து இருப்பேன். அந்த போட்டியில் ஸ்பின் இருந்தது.

சாய் சுதர்சன் அறிமுகமாகிறார். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. ருத்ராஜ், திலக், சாம்சன் இந்த மூன்று பேருடைய பெயர்கள் எப்பொழுதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடியது. எனவே அவர்களும் அணியில் இருக்கிறார்கள்.

அக்சர் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்த மைதானத்தில் விளையாட விரும்புவார்கள்.அழுத்தம் என்றால் என்ன? அழுத்தத்தின் கீழ் தங்களை எப்படி கையாள்வது? என்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் அந்த தீவிரமான அனுபவத்துடன் வரக்கூடியவர்கள்!” என்று கூறி இருக்கிறார்!