ஏமாற்றமா இருக்கேன்.. அந்த 2 விஷயம் மட்டும் நடக்காம இருந்தா மேட்ச் மாறி இருக்கும்.. இலங்கை கேப்டன் விரக்தி பேச்சு!

0
3375
Mendis

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி இன்று இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இன்று டாஸ் வென்று முதலில் இந்திய அணியை இலங்கை கேப்டன் பேட்டிங் செய்ய சொன்னது, மும்பை தட்பவெப்ப நிலையில் இந்திய அணிக்கு மிகவும் சாதகமாக இருந்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் மூவரும் சதத்தை நெருங்கி தவற விட்டு அதிரடியாக அரைசதம் எடுத்துக் கொடுத்தார்கள். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி வெறும் 55 ரன்கள் சுருண்டு 302 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணியை பிரமாண்ட வெற்றி பெற செய்திருக்கிறது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, சமி, சிராஜ் மூவரும் உலகத்தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். அவர்களை இலங்கையின் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் எதிர்கொண்டு விளையாடுவது சுலபமாக அமையவில்லை.

- Advertisement -

இந்த ஆண்டு ஆசியக்கோப்பையில் இறுதி போட்டியில் இலங்கை அணியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழு என்ன செய்ததோ அதையேதான் தற்பொழுதும் செய்திருக்கிறது. இந்த தோல்வி ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நிர்வாகம், அதன் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் பேசும்பொழுது “நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். அவர்கள் ஸ்விங் மற்றும் சீம் உடன் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். துரதிஷ்டவசமாக எங்களின் திறமைக்கு ஏற்ற வகையில் எங்களால் இன்று விளையாட முடியவில்லை.

ஆடுகளம் மெதுவாக இருப்பதாக தெரிந்தது. அதன் காரணமாகத்தான் நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன். மதுசங்கா நன்றாகவே பந்து வீசவும் செய்தார். ஆனால் கில் மற்றும் விராட் கோலி ரெண்டு பேருக்கும் நாங்கள் கொடுத்த வாய்ப்பு பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. பின்னர் ஆட்டம் கொஞ்சம் மாறியது. ஆனாலும் நடுவில் எங்கள் பந்துவீச்சாளர்கள் திரும்ப வந்தார்கள். அனைவரும் மிடில் ஓவர்களில் நன்றாகவே இருந்தார்கள்.

பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். முதல் ஆறு ஓவர்களை அவர்கள் வீசிய விதத்திற்கு எல்லா பெருமையும் அவர்களுக்கே சேரும். நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகள் இருக்கின்றன. இந்த போட்டிகளுக்கு நாங்கள் வலிமையாக திரும்பி வரவேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!