“நான் தோனி” – மீண்டும் வைரலான தோனியின் ஆரம்பகால அறிமுக வீடியோக்கள்!

0
208

இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் எம்எஸ்.தோனி. 24 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான இவர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் .

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்து விளையாடி வருகிறார் . இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் அதிரடி வீரராக இருந்த தோனி இந்தியா அணிக்கு கேப்டனான பின்பு 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்ற இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் .

ஒரு சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த ஃபினிஷர் ஆகவும் உலக கிரிக்கெட்டில் அறியப்பட்டவர் . தோனி என்றாலே கேப்டன் கூல் மற்றும் பினிஷர் இந்த இரண்டு விஷயங்கள் தான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் முதலில் ஞாபகம் வரும் . இந்திய அணியாளும் ஐசிசி போட்டிகளில் வெல்ல முடியும் என்பதை நிரூபித்த இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் முதன்மையானவர் எம்எஸ்.தோனி . இவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் பினிஷர் ஆக மட்டும் அல்லாமல் சிறந்த அதிரடி வீரராகவும் அணியின் சூழ்நிலையை புரிந்து ஆடும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் இந்திய அணிக்கு இருந்திருக்கிறார் .

இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி இருக்கும் தோனி 4876 ரன்களை சேர்த்து இருக்கிறார் . இதில் ஆறு சதங்களும் 33 அரை சதங்களும் அடங்கும் . டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆனா 224 ரன்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் எடுக்கப்பட்டது. மேலும் 350 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி இருக்கும் தோனி 10773 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் பத்து சதங்களும் 73 அரை சதங்களும் அடங்கும் . ஒரு நாள் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்கள் 183 ரன்கள் இலங்கை அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் வைத்து அடிக்கப்பட்டது .

- Advertisement -

2000 களின் துவக்கத்திலிருந்து தற்போது வரை இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஸ்டாராக விளங்கும் எம் எஸ் தோனியின் ஆரம்ப கால கிரிக்கெட் அறிமுக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது . நீண்ட தலைமுடியுடன் காட்சியளிக்கும் அதிரடியான தோனியின் இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

தோனி தன்னுடைய கிரிக்கெட் கேரியர் இன் ஆரம்பப் போட்டியில் இருந்து அவர் கேப்டன் ஆகிய போட்டிகள் வரை உள்ள அறிமுக வீடியோக்களை இணைத்து ஒரே வீடியோவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கின்றனர் இந்த வீடியோ தான் தற்போது டிராப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.