தற்போது இந்தியாவில் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு முகமது சிராஜ் பந்துவீச்சில் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.
தற்போது முகமது சிராஜ் தொடர்ந்து இந்திய வெள்ளைப் பந்து வடிவத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அவருடைய இடத்திற்கு ஹர்ஷித் ராணாவை விளையாட வைத்து வருகிறார்கள். தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. ஆனால் டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டிலும் முகமது சிராஜ் விளையாடினார்.
சிராஜ் சிறப்பான சம்பவம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பலம் வாய்ந்த மும்பை அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. மும்பை அணிக்காக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மூத்த வீரர் ரகானே 9 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த போட்டியில் 3.5 ஓவர்கள் பந்து வீசிய முகமது சிராஜ் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து அவருடைய பந்துவீச்சு மிகவும் கூர்மை அடைந்து இருக்கிறது. அது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தொடர்கிறது. மேலும் இந்த போட்டியில் ஹைதராபாத் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எதனால் வாய்ப்பு இல்லை?
முகமது சிராஜ் ஏற்கனவே டிராவிட் பயிற்சி காலத்தில் மூன்று வடிவ இந்திய அணிகளும் இடம்பெற்று இருந்தார். மேலும் அவருடைய பந்துவீச்சு மிகவும் மோசமான முறையில் இருந்தது கிடையாது. அவருடைய பங்களிப்பு ஓரளவுக்கு நல்ல முறையில்தான் இருந்து வந்தது. இப்பொழுது இன்னும் மிகவும் சிறப்பாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: கம்பீர் பண்ற அது எனக்கு உடன்பாடு இல்லை.. அதனால இந்தியா அந்த தந்திரத்தை தவறவிடுது – உத்தப்பா கருத்து
இருந்த போதிலும் இந்தியத் தேர்வுக் குழு மற்றும் இந்திய அணி நிர்வாகம் அவரை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால், தற்போது அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் அணி கண்டபடி சிதைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






