தற்போது இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் அடிக்கடி இந்திய பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டே இருப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என ராபின் உத்தப்பா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பா கம்பீர் தலைமையில் விளையாடியவர். மேலும் அவருக்கு ஆதரவாக எப்பொழுதும் பேசிக் கொண்டு வந்தவர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெளிப்படையாக கம்பீர் அணுகுமுறை குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த யுக்தியே தவறு
இது குறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது ” நீங்கள் சீக்கிரத்தில் விக்கெட் இழக்கலாம் அது எனக்கு பிரச்சனை கிடையாது. கில் எடுத்ததும் அவுட் ஆனதும் நீங்கள் அக்சர் படேலை அனுப்பி வைத்த யுக்திதான் தவறானது. நீங்கள் ஒரு பெரிய டோட்டலை துரத்தும் பொழுது உங்களுக்கு அந்த இடத்தில் அவர் அதிரடியாக விளையாடும் ரோலை செய்ய வேண்டும். அவர் அபிஷேக் சர்மாவின் மீது அழுத்தத்தை குறைக்க வேண்டும்”
“ஆனால் அங்கு என்ன நடந்தது? அவர் மொத்தம் 21 பந்துகளை சந்தித்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அங்கு ரன் அழுத்தம் இன்னும் அதிகரித்தது. மேலும் அவரைச் சுற்றி விக்கெட் விழ ஆரம்பித்ததும் அவர் பொறுமையாக விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்”
எனக்கு உடன்பாடு கிடையாது
” சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு தெளிவான ரோல் தேவைப்படுகிறது. மேலும் ஒரு போட்டியை அவர்கள் எப்படி விளையாட போகிறார்கள் என்கின்ற தெளிவும் தேவையானது. நீங்கள் ஆறு அல்லது எட்டு ஓவர்களுக்கு பிறகு பேட்டிங் வரிசையை மாற்றி அனுப்புகிறீர்கள் என்றால் அது பிரச்சனை கிடையாது. மேலும் நீங்கள் ஒரு பெரிய டோட்டலை துரத்தும் போது உங்களுக்கு வலிமையான அடித்தளம் தேவை”
இதையும் படிங்க : கில் துணை கேப்டனாக இருந்தாலும் நீக்கலாம்.. வரலாற்று சாதனை வீரருக்கு வாய்ப்பு கொடுங்க – முகமது கைப்
“மேலும் ஒரு போட்டியில் வீரர்களை பல்வேறு ரோலுக்கு நீங்கள் தயாராக செல்லும் பொழுது ரன் குவிப்பது சிக்கலாக மாறுகிறது. இதன் காரணமாக இந்தியா தந்திரத்தை தவறவிடுகிறது. நீங்கள் மேல் வரிசையிலேயே பேட்டிங் ஆர்டரை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார்.






