ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் பைனலில் மோசமான சாதனை.. சொல்லி வைத்து கொல்கத்தா பவுலர்கள் கலக்கல்

0
122
SRH

இன்று 17வது ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று கொண்டிருக்கிறது.ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் மிகக் குறைந்த ரன்னை ஹைதராபாத் பதிவு செய்து மோசமான சாதனை படைத்திருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்தமுறை ஷாபாஷ் அகமதை அணிக்குள் கொண்டு வந்து, அப்துல் சமத்தை இம்பேக்ட் பிளேயராக வைத்தார்கள். கொல்கத்தா அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

முதல் ஓவரை ஸ்டார்க் வீச அதை எதிர்கொள்ளக் கூடாது டிராவிஸ் ஹெட் அபிஷேக் ஷர்மாவை விளையாட வைத்தார். ஆனால் ஸ்டார்க் அபிஷேக் ஷர்மாவை இரண்டு ரன்னில் கிளீன் போல்ட் செய்தார். அடுத்து டிராவிஸ் ஹெட்டை வைபவ் அரோரா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார். ஹைதராபாத் அணிக்கு இங்கு உருவான சரிவு தொடர்ந்து நிற்கவே இல்லை.

இதைத்தொடர்ந்து ராகுல் திரிபாதி 13 பந்து 9 ரன், எய்டன் மார்க்ரம் 23 பந்தில் 20 ரன், ஷாபாஷ் அகமது 7 பந்தில் 8 ரன், அப்துல் சமத் 4 பந்தில் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேறி, ஹைதராபாத் அணி நிர்வாகத்திற்கும் அதன் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியைக் இறுதி போட்டியில் கொடுத்தார்கள்.

இந்த நிலையில் கடைசி நம்பிக்கையாக கிளாசன் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். பொறுமையாக விளையாடி வந்த கிளாசன் 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த உனட்கட் 11 பந்தில் 4 ரன், கம்மின்ஸ் 19 பந்தில் 24 ரன் எடுத்தார்கள். 18.3 ஓவரில் கொல்கத்தா அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரசல் 3, ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : டாசில் தைரியம்.. பேட்டிங்கில் ஹைதராபாத் பதுங்கல்.. ஹெட்டை சீண்டிய ஸ்டார்க்.. பைனல் துவங்கியது

ஐபிஎல் வரலாற்றில், ஐபிஎல் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் அணி உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் இந்த ரன்னை வைத்து ஹைதராபாத் வென்றால், இதுவே குறைந்த ஸ்கோரை வைத்து வென்ற இறுதிப் போட்டியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.