டாசில் தைரியம்.. பேட்டிங்கில் ஹைதராபாத் பதுங்கல்.. ஹெட்டை சீண்டிய ஸ்டார்க்.. பைனல் துவங்கியது

0
182
Starc

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசனில் இறுதி போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் ஸ்டார்க் சக அணி வீரர் ஹெட் இடம் சுவாரஸ்யமான சீண்டலில் ஈடுபட்டார்.

இன்றைய போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை மிக தைரியமாக தேர்வு செய்தார். ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் பனி வருமா? என்பது குறித்து கம்மின்ஸ் பயப்படாமல் முடிவு செய்தார்.

- Advertisement -

மேலும் இந்த முறை ஹைதராபாத் அணி ஷாபாஷ் அகமதை நேரடியாக அணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த முறை அவர் இம்பேக்ட் பிளேயராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கொல்கத்தா அணியில் எந்த வித மாற்றங்களும் செய்யப்படாமல் களம் இறக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் சக வீரரான வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் இடம் நான்கு முறை டிராவிஸ் ஹெட் தொடர்ந்து பெரிய அளவில் செல்ல முடியாமல் ஆட்டம் இழந்து இருக்கிறார். கடந்த முறையும் இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்ட் ஆகி வெளியேறியிருந்தார்.

எனவே இதன் காரணமாக ஹெட் இந்த முறை போட்டியின் முதல் பந்தை சந்திக்க முன்வரவில்லை. வழக்கமாக அவர்தான் ஓபனராக முதல் பந்தை விளையாடுவார். இந்த நிலையில் இந்த முறை அபிஷேக் ஷர்மா விளையாடினார். ஆனால் அவரையும் ஸ்டார்க் விட்டு வைக்காமல் ஒரு கனவு பந்தை வீசி கிளீன் போல்ட் ஆக்கினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 ஐபிஎல்.. எல்லாருக்கும் கேப்டன் கம்மின்ஸ்தான்.. இத்தனை வேலை செய்திருக்கார் – இர்பான் பதான் கருத்து

இந்த நிலையில் முதல் பந்தை வீசிவிட்டு நேராக ஹெட் இடம் சென்ற ஸ்டார்க் ” நீ ஏன் இந்த முறை முதல் பந்தை விளையாடவில்லை? ” என்பது போல கேட்டு சீண்டி விட்டு சென்றார். ஐபிஎல் இறுதிப் போட்டியில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களே சீண்டிக் கொள்ளும் அளவுக்கு அமைந்திருக்கிறது. மேலும் அபிஷேக் சர்மா இரண்டு ரன்னில் வெளியேறி இருக்க, ட்ராவிஸ் ஹெட் ரன் ஏதும் இல்லாமல் வைபவ் அரோரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். துவக்கமே ஹைதராபாத்துக்கு பரிதாபமாக அமைந்திருக்கிறது!