இந்தியாவின் உள்நாட்டு தொடரான மகாராஜா டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஆறாவது போட்டியில் குல்பர்கா மிஸ்டிக்ஸ் மற்றும் ஹப்லி டைகர்ஸ் அணிகள் மோதின. இதில் குல்பர்கா அணிக்கு படிக்கல் கேப்டன் ஆகவும், ஹப்லி டைகர்ஸ் அணிக்கு மணீஷ் பாண்டே கேப்டன் ஆகவும் செயல்படுகின்றனர்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மணீஷ் பாண்டே தலைமையிலான ஹப்லிக் டைகர்ஸ் அணி
இந்த இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆறாவது லீக் போட்டியில் டாஸ் என்ற ஹப்லி டைகர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் தொடங்கிய குல்பர்கா அணி ஓரளவு நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் படிக்கல் மற்றும் சிசோதியா ஆகியோர் களமிறங்கினார்கள்.
இந்த இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 9 ஓவர்களில் 81 ரன்கள் சேர்த்தது. இதில் 27 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 39 ரன்கள் குவித்த சிசோதியா ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு கேப்டன் படிக்கல் 29 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் என 46 ரன்கள் குவித்தார்.
இந்த இருவரும் ஆட்டம் இழந்து வெளியேறியதால் அதற்குப் பிறகு குல்பர்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் பந்து வீச்சில் ஹப்லி அணியின் எல் குமார் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு கரியப்பா இரண்டு விக்கெட்டுகளும் போபன்னா, அச்சார் மற்றும் கவேரப்பா ஆகியோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஹப்லி டைகர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இருவரும் 7 ரன்களில் வெளியேறினாலும் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கிருஷ்ணன் ஸ்ரீஜித் மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி சிறப்பாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் குவித்தது. இதில் கிருஷ்ணன் ஸ்ரீஜித் 36 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : தப்பா புரிஞ்சிக்காதிங்க.. நடராஜனுக்கு துலீப் டிராபியில் வாய்ப்பு கிடைக்காத காரணம் இதுதான் – அஸ்வின் விளக்கம்
மறுபுறம் கேப்டன் மணிஷ் பாண்டே 30 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் கௌதம் கூட்டணி 35 பந்துகளில் 59 ரன்கள் குவித்து 18.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்து மனிஷ் பாண்டே தலைமையிலான ஹூப்லி டைகர்ஸ் அணி வெற்றி பெற்றது.