தப்பா புரிஞ்சிக்காதிங்க.. நடராஜனுக்கு துலீப் டிராபியில் வாய்ப்பு கிடைக்காத காரணம் இதுதான் – அஸ்வின் விளக்கம்

0
1517
Ashwin

இந்திய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் வடிவ தொடர் துலீப் டிராபியில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாத காரணம் குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.

அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி நடக்க இருக்கிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா முகமது சமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர எல்லா இந்திய வீரர்களும் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

மேலும் இதுவரையில் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த துலீப் டிராபி இந்த முறை ஏபிசிடி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த நான்கு அணிகளுக்கும் முறையே சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டும், இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை, ஜிம்பாபே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான வெள்ளை பந்து தொடர்களில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. தற்போது துலீப் டிராபியிலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் டிராபியில் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படாத குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது வெள்ளைப்பந்து வடிவத்தில் மட்டுமே நடராஜனுக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதற்கு அடுத்து அப்போது கோவிட் காலமாக இருந்தது. எனவே தொடர்ந்து நடராஜன் கார்த்திக் தியாகி போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை வலைப் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி நிர்வாகம் வைத்துக் கொண்டது.

இதையும் படிங்க : 26 ஓவர்.. பேஸ்பால் ஆடிய இங்கிலாந்து ஏ அணி.. இலங்கை பரிதாப தோல்வி.. மெயின் தொடருக்கு முன்பே சறுக்கல்

இப்படியான நிலையில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் மட்டுமே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரை வெள்ளை பந்துக்கான வேகப்பந்துவீச்சாளராக மட்டுமே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்த்தது. கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் அவர் 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் விளையாடி இருக்கிறார். எனவேதான் அவரை துலீப் டிராபிக்கு தேர்வாளர்கள் பரிசீலிக்க வில்லை” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -