“இன்னைக்கு போட்டி முடிவு எப்படி இருந்தாலும்.. உலக கோப்பை இவங்களுக்குதான்!” – ராஸ் டெய்லர் அதிரடி பேச்சு!

0
66482

இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் போட்டி நடைபெறுகிறது.

இரண்டு அணிகளும் நான்கு போட்டிகள் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று, தோல்வியடையாத அணிகளாக இருக்கின்றன. இதில் நாளை ஒரு அணி தோல்வி அடையப்போகிறது என்பதால் போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்தின் ஆதிக்கம் இந்தியா மீது பெரிய அளவில் இருந்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரை இறுதியிலும் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது.

மேலும் போட்டி நடக்கும் தரம்சாலா மைதான சூழல் பந்து ஸ்விங் ஆவதற்கு ஏற்ற வகையில் கொஞ்சம் இருக்கும். இதன் காரணமாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் குறிப்பாக டிரெண்ட் போல்ட் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் கூறும் பொழுது “இந்திய அணி இந்தியாவில் வித்தியாசமான ஒரு பீஸ்ட். அவர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் வலிமையாக துவங்கி இருக்கின்றனர். இன்று தரம்சாலாவில் என்ன நடந்தாலும், உலகக் கோப்பையை வெல்லும் அணியாக நான் இந்தியாவையே பார்க்கிறேன்.

- Advertisement -

பும்ரா வேகப்பந்துவீச்சில் அற்புதமான தாக்குதலை நடத்துகிறார். அதே சமயத்தில் சுழற் பந்துவீச்சில் குல்தீப் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக இருக்கிறார்கள். மேலும் அவர்களின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக நீண்ட காலமாக விளையாடுகிறார்கள்.

அதே சமயத்தில் முதல் மூன்று பேர் எல்லா நேரங்களிலும் ரன் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் தற்பொழுது இந்தியாவிற்கு நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பது அவர்களை வலிமை ஆக்குகிறது. நியூசிலாந்து அழுத்தத்தை கொடுக்க ஆரம்ப விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டும்.

கூட்டம் இங்கு இயல்பாகவே ஒரு பங்கை வகிக்கும். இப்படியான நிலையில் நியூசிலாந்து சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். நீங்கள் இங்கு வரும் ஒவ்வொரு முறையும் பெரிய கூட்டத்திற்கு முன் விளையாடுகிறீர்கள். கூட்டம் உங்களுக்கு எதிராக இருக்கும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனாலும் கூட அதே சமயத்தில் உலகக் கோப்பையில் விளையாட நீங்கள் விரும்புகிறீர்கள். மைதானம் முழுவதும் நிரம்பி இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் வெளிப்படுத்த முயற்சி செய்வீர்கள். எனவே இப்படி ஆன காரணத்தினால் நியூசிலாந்து சிறப்பாக செயல்படும் என்று தோன்றுகிறது!” என்று கூறியிருக்கிறார்!