சச்சின் மகன் பௌலிங் எப்படி இருந்தது? மார்க் போட்ட சேவாக் ஸ்ரீசாந்த்!

0
21015
Arjun

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள். முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணியில் முக்கிய மாற்றங்களாக கேப்டன் ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயர் ஆக்கி, சூரியகுமார் யாதவை கேப்டன் ஆக்கினார்கள்.

- Advertisement -

அடுத்து ஹைதராபாத் அணிக்காக விளையாடும் மார்க்கோ யான்சென்னின் உடன் பிறந்த இரட்டயரான டி. யான்சென் மும்பை அணிக்காக இன்று அறிமுகம் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் இரட்டையர்கள் என்ற அரிய நிகழ்வுக்கு சொந்தக்காரர் ஆனார்கள்.

இதற்கு அடுத்து இன்னொரு மிக முக்கிய நிகழ்வாக இந்திய கிரிக்கெட்டில் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய அவர் அந்த ஓவரில் நான்கு ரண்களையும், ஒரு அவுட் அப்பிலையும் பெற்றார். இதற்கடுத்த தனது இரண்டாவது ஓவரை வீசிய அவர் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் இரண்டு ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் கொடுத்த அவரது பந்துவீச்சு குறிப்பிடும்படியாகவே இருந்தது. இவரது பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் சேவாக் தங்களது கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் கூறும்பொழுது ” மைதானத்தில் அவரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஜாம்பவான் கிரிக்கெட்டரின் மகனை பார்ப்பது சந்தோஷமான ஒன்று. ஒரு ஜாம்பவானுக்கு மகனாக இருந்து வந்து விளையாடுவது எளிதான காரியம் கிடையாது. ஆனால் அர்ஜுன் மிக நல்ல முறையில் வெளிப்பட்டார். மேலும் அவர் தனது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதாகவே நான் உணர்கிறேன். அவர் ஒரு விக்கெட்டை பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். கிடைக்காவிட்டாலும் சச்சின் பாஜி போன்ற ஒரு தந்தை இருப்பது அவர் நல்ல நிலைக்கு வர உதவும் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேவாக்
சுருக்கமாக ” அவர் பந்துவீச்சு புத்திசாலித்தனமாக இருந்தது!” என்று மட்டும் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் மும்பைக்காக அர்ஜுன் டெண்டுல்கர் வெற்றிக்கான ஒரு சிக்சரை அடிக்க வேண்டும் என்று சேவாக் விரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!