நான் உன்னை எப்போதும் போல் மாஹி எனக் கூப்பிடட்டுமா அல்லது இளம் வீரர்கள் போல் கூடுதல் மரியாதை தர வேண்டுமா ? – உத்தப்பாவின் கேள்விக்கு தோனி பதில்

0
9378
Robin Uthappa and MS Dhoni

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா வந்து சேர்ந்தார். நான்கு போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அந்த நான்கு போட்டிகளில் மொத்தமாக 113 ரன்கள் குவித்தார். குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 43 பந்துகளில் 64 ரன்களும், இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 15 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ராபின் உத்தப்பா அசத்தினார்.

கடந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடிய இவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி மீண்டும் தேர்ந்தெடுத்தது. பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மீண்டும் சென்னை அணி நிர்வாகம் இவரை கைப்பற்றியது.

- Advertisement -

2 கோடி ரூபாய்க்கு விலை போன ராபின் உத்தப்பா கடந்த ஆண்டு போலவே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்து மொத்தமாக இதுவரை 91 ரன்கள் குவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி குறித்து பேசியுள்ள ராபின் உத்தப்பா

ரவிச்சந்திரன் அஸ்வின் அவருடைய யூ டியூப் வலைதளத்தில் ராபின் உத்தப்பாவிடம் நேர்காணல் எடுத்தார். அந்த நேர்காணலில் ராபின் உத்தப்பா மகேந்திர சிங் தோனிக்கும் தனக்கும் உண்டான நட்பு குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

2004ஆம் ஆண்டு முதல் மகேந்திர சிங் தோனி எனக்கு பழக்கம் என்றும், அதன் பின்னர் நாங்கள் இருவரும் இணைந்து நிறைய விஷயங்களை பரிமாறிக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, கேலி கிண்டல் அடித்து நகைச்சுவையாக விளையாடி கொள்வது என நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி வெளியே பார்ப்பதற்கு அமைதியான நாடாக இருந்தாலும் அவர் உண்மையில் கலகலப்பானவர். சுற்றியிருக்கும் எல்லோரையும் கலகலப்பாக வைத்துக் கொள்வார். அதேசமயம் சுற்றி உள்ள அனைவர் மீதும் எப்பொழுதும் அதிக அளவு பாசம் வைத்து இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

தற்பொழுது சென்னை அணியில் மகேந்திர சிங் தோனியை அனைத்து வீரர்களும் தோனி பாய் (தோனி அண்ணா) என்று அழைத்த பொழுது, நான் எப்படி இப்பொழுது அவரை அழைப்பது என்ற கேள்வி எனக்கு எழுந்தது. நான் நேரடியாக அவரிடம் சென்று தோனி உன்னை நான் எப்படி அழைக்க என்று கேட்டேன். அதற்கு அவர் நீ எப்பொழுதும் போல என்னை எம்எஸ் அல்லது தோனி என்றே அழைக்கலாம், என்று தோனி கூறியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மிகப் பெரிய உயரத்துக்கு சென்றாலும் தற்பொழுது கூட தன்னிலை மாறாமல் நட்புடன் பழகுவது தோனியின் சிறப்பம்சம் என்று, ராபின் உத்தப்பா மகேந்திர சிங் தோனியை வெகுவாக பாராட்டிப் பேசியுள்ளார்.