“வரிசையில் நிக்காமலே ருதுராஜ்க்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?” – கடுப்பான இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்

0
6924

தலை இல்லாமல் வால் ஆடக்கூடாது என்று சொல்வார்கள். அதற்குத் தகுந்தார் போல் தேர்வு குழு தலைவர் இல்லாமல் மற்ற உறுப்பினர்கள் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ஒரு அணியை தயார் செய்திருக்கிறார்கள். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யாரும் சரியாக விளையாடாத நிலையில், புஜாராவை மட்டும் அணியில் இருந்து நீக்கியது? ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ்க்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கியது? ரஞ்சிக் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய சர்பிராஸ் கான் அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு கல்தா கொடுத்தது போன்ற பல்வேறு சர்ச்சைகள் இருந்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடந்த மூன்று ரஞ்சி சீசனில் சப்ராஸ்கான் 2000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். டான் பிராமேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர், டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய ஐபிஎல் செயல்பாடுகளை ஏன் பார்க்கிறீர்கள்.

உங்களுடைய செயல்பாடு அங்கீகரிக்கப்பட்டது என்று கூறி நீங்கள் குறைந்தபட்சம் அணியிலாவது சர்பிராஸ் கானை தேர்வு செய்திருக்க வேண்டும். பிறகு எதற்கு ரஞ்சி கிரிக்கெட் நடத்துகிறீர்கள். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஐ பி எல் மட்டும் விளையாடிவிட்டு சிவப்பு நிற பந்தில் அவர் நன்றாக விளையாடுவார் என நீங்கள் தேர்வு செய்யலாமே என்று கூறியுள்ளார்.

இதேபோன்று முன்னாள் தொடக்க வீரரான ஜாபர் தேர்வு குழுவினரிடம் மூன்று கேள்வியை கேட்டுள்ளார். அதில் ஒரு அணியில் எதற்கு நான்கு தொடக்க வீரர்கள்? அதற்கு பதிலாக நீங்கள் சர்பிராஸ் கானை  கூடுதலாக நடு வரிசையில் தேர்வு செய்து அவர் ரஞ்சி கிரிக்கெட்டின் சிறப்பாக விளையாடியதை கௌரவப்படுத்தி இருக்கலாம்.

- Advertisement -

அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் பிரியங்கா பஞ்சால் ஆகியோர் ரஞ்சி மற்றும் இந்திய அணி தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பதற்காக அணியில் சேர்க்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

ருதுராஜ்  எப்படி வரிசையில் முந்தி இந்திய அணிக்கு சென்றார். ஒரு மாத காலம் ஓய்வில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் நிலையில் மீண்டும் முகமது சமிக்கு எதற்கு ஓய்வு வழங்கியிருக்கிறீர்கள். முகமது சமி தொடர்ந்து பந்து வீசிக்கொண்டே இருந்தால்தான் அவர் உடல் தகுதியுடனும் பார்ம் உடனும் இருப்பார் என்று வசீம் ஜாபர் கேள்வி எழுப்பி உள்ளார்.