1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்களும், இந்திய வீரர்களும் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அப்துல் ரசாக் அதிர்ச்சி தகவல்

0
2120

உலக கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் யார் என்றால் அது இந்தியா தான் என்று அனைவருக்குமே தெரியும். இந்தியாவின் பரம எதிரிகளாக கருதப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியிலிருந்து தற்போது தான் மீண்டு வருகிறது. இதற்கு காரணம் அவர்கள் நாட்டில் 2009 ஆம் ஆண்டில் இருந்து பத்து ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்கள் எதுவுமே நடைபெறவில்லை.

- Advertisement -

இதனால் அவர்களுடைய வருமானம் கடுமையாக பாதித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஜிம்பாப்வே தொடர் என அடுத்தடுத்து போட்டிகளை நடத்தி தற்போது ஆசிய கோப்பையை நடத்தும் அளவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடினால் ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது குறித்து அந்த அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அப்துல் ரசாக் எங்களுடைய முழு சம்பாத்தியம் அனைத்துமே பாகிஸ்தான் அணியில் விளையாடியது மூலமே எங்களுக்கு கிடைக்கும். அதுவே எங்களுக்கு போதுமானதாகவே இருந்தது. 1996 ஆம் ஆண்டு எல்லாம் நாங்கள் ஒரு சர்வதேச போட்டியில் விளையாடினால் போட்டி ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் தான் கிடைக்கும்.

- Advertisement -

ஆனால் அதே காலகட்டத்தில் இந்திய வீரர்கள் ஒரு போட்டிக்கு ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஊதியமாக பெற்றார்கள். ஆனால் அந்த காலத்தில் எல்லாம் நாங்கள் முப்பது முதல் 35 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் குறைந்தபட்சம் 10 டெஸ்ட் போட்டியில் வந்து விளையாடுவோம்.

இதன் மூலம் எங்களுக்கு வருமானம் கிடைத்தது. அதன் பிறகு 2000 ஆண்டு நிலைமை கொஞ்சம் மாறியது. அப்போது ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடினால் எங்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அப்போதெல்லாம் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு எந்த ஆண்டு ஒப்பந்தத்தையும் கொடுக்காது.

எனினும் அப்போது எங்களுக்கு கிடைத்த மரியாதையே வேறு தான். சம்பளம் அதிகமாக கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடி வந்தோம். ஆனால் எங்களுக்கு சில நல்ல விளம்பரதாரர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.

நான் 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினால் பத்து லட்சமும், ஒரு நாள் போட்டிகளில் விளையாடினால் ஐந்து முதல் ஆறு லட்சமும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடினால் மூன்று முதல் மூன்றரை லட்சம் பரிசாக கிடைக்கும் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.