தகுதிச்சுற்றில் இருந்து உலகக் கோப்பைக்கு எத்தனை அணிகள் வாய்ப்பு பெறும்? வெஸ்ட் இண்டீஸ்க்கு வாய்ப்பு இருக்கா?

0
7965
Odiwc2023

இந்தியாவில் வைத்து முதல்முறையாக முழுவதுமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது!

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் தகுதிப் பெற்றுள்ளன!

- Advertisement -

இந்த நிலையில் மொத்தம் பத்து அணிகளைக் கொண்டு நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான மீதம் இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்காக தற்பொழுது தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாவேயில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தகுதிச்சுற்று போட்டியில் 10 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ குழுவில் நேபாள், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளும், பி குழுவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெற்றுள்ள ஐந்து அணிகளும் தங்களுக்குள் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடிக் கொள்ளும். இதில் இரு குழுக்களிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் ஆறு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.

- Advertisement -

இந்த ஆறு அணிகளை வைத்து நடத்தப்படும் இரண்டாவது சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு ஒரு போட்டியில் மோதும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இந்த இரண்டு அணிகளுமே இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கும் தகுதிபெறும்.

மேலும் இந்த இரண்டாவது சுற்றில் அணிகள் ஒரே மாதிரியான புள்ளிகளை எடுத்து இருக்கும் பொழுது, தகுதி பெறுவதற்கு, அதற்கு முந்தைய சுற்றில் எந்தெந்த அணிகளை வென்றது என்று பார்க்கப்படும். இந்த வகையில் ஒரே புள்ளியை எடுத்த இரண்டு அணிகள் இருக்கும் பொழுது, அந்த இரண்டு அணிகளும் முதல் சுற்றில் மோதிய பொழுது யார் வென்றார்களோ அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

தற்பொழுது முதல் சுற்றில் ஏ பிரிவில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்திருக்கிறது. ஆனாலும் அடுத்த சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறும் நிலையில் இருக்கிறது.

ஆனால் அடுத்த சுற்றில் ஜிம்பாப்வே அணியை விட புள்ளிகள் அதிகம் பெற்றால் மட்டுமே அந்த அணியை தாண்டி இறுதிப் போட்டிக்கும் உலகக்கோப்பைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!