சமூக வலைதளங்களில் 10 ஐபிஎல் அணிக்கும் எவ்வளவு பாலோயர்கள் இருக்கிறார்கள்? – துல்லியமான புள்ளி விபரம்!

0
125
IPL

எத்தனை நாட்கள் என்று கூட கணக்கில்லாமல் இரண்டு இன்னிங்ஸ்கள் என்று இருந்த கிரிக்கெட்டை, ஐந்து நாட்களுக்குள் அடக்கி ஒரு சுவாரசியத்திற்கு கொண்டு வந்தார்கள். பின்பு இதே கிரிக்கெட் வடிவம் 60 ஓவர்களுக்கு மாறி பின்பு அது 50 ஓவர்களாகச் சுருக்கப்பட்டு, கிரிக்கெட்டில் மிக வெற்றிகரமான வடிவமாக விளங்கியது!

இதிலிருந்து மாற்றத்தை தேடிய கிரிக்கெட் உலகம் 2004 ஆம் ஆண்டு பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் டி20 கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துகிறது.

- Advertisement -

அடுத்த ஆண்டு நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிப்ரவரி மாதம் ஆக்லாந்தில் ஆண்களுக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் முதன்முறையாக விளையாடப்படுகிறது. இங்கிருந்து மெது மெதுவாக ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இருந்த இடத்தை மெல்ல மெல்ல டி20 கிரிக்கெட் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறது.

பிறகு 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் வைத்து டி20 கிரிக்கெட்க்கான உலகக் கோப்பைத் தொடர் முதன் முதலில் நடத்தப்பட்டது. அந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அடுத்து இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குவதற்கு பாதையை அமைத்தது.

டி20 கிரிக்கெட் எப்படியானது என்கின்ற அறிமுகத்தை அந்த உலகக் கோப்பை வெற்றி இந்தியாவில் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க, இந்தியாவில் டி20 கிரிக்கெட்டின் பிரபல்யம் அதிகரித்தது. இது 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக பிரான்சிஸைஸ் டி20 லீக் ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துவதற்கு எளிதாக இருந்தது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 லீக் 15 சீசன்களை தாண்டி நாளை பதினாறாவது சீசனில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. 11ஆவது சீசனில் முதல் போட்டி அகமதாபாத்தில் நடக்க சென்னை குஜராத் அணிகள் பல பரிசை நடத்த இருக்கின்றன.

உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த முக்கிய பொருளாதார காரணியாக இருக்கும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளாக யார் யார் இருக்கிறார்கள் அவர்களை சமூக வலைதளங்களில் எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.

சென்னை 33.84 மில்லியன்
மும்பை 32.32 மில்லியன்
பெங்களூரு 26.66 மில்லியன்
கொல்கத்தா 25.74 மில்லியன்
பஞ்சாப் 14.45 மில்லியன்
டெல்லி 14.25 மில்லியன்
ஹைதராபாத் 12.41 மில்லியன்
ராஜஸ்தான் 10.49 மில்லியன்
குஜராத் 3.08 மில்லியன்
லக்னோ 2.73 மில்லியன்