ஷமி எப்படி இருக்கிறார்? பந்து வீச ஆரம்பித்து விட்டாரா? விளையாடுவாரா? – பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோகித் சர்மா!

0
647
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றது!

அங்கு பெர்த் மைதானத்தில் முகாமிட்ட இந்திய அணி மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதிவிட்டு, தற்போது ஐசிசி யின் அதிகாரப்பூர்வ பயிற்சி ஆட்டங்களில் விளையாட பிரிஸ்பேனுக்கு வந்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, பலவித கேள்விகளை எதிர்கொண்டு அதற்கு தனக்கே உரிய எதார்த்தமான, நகைச்சுவையான முறையில் பதில்களை அளித்தார்.

சில கேள்விகளுக்கு மிகவும் நுட்பமாக நடைமுறை எதார்த்ததோடு பதிலளித்தார். குறிப்பாக முகமது சமி பற்றி நிறைய கேள்விகளை ரோகித்சர்மா எதிர்கொண்டார். முகமது சமி தற்போது எப்படி இருக்கிறார்? பயிற்சியைத் துவங்கி விட்டாரா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி. இதற்கு நம்மால் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாது. நீங்கள் அதிகம் விளையாடும் பொழுது உங்களுக்கு காயம் ஏற்படத்தான் செய்யும். எனவே பென்ச் வலிமையை அதிகப்படுத்த எங்களது கவனம் உள்ளது. இதற்காக இளைஞர்களுக்கு அணியில் அதிக வாய்ப்பு கொடுத்தோம் என்பதையும் நீங்கள் பார்த்தீர்கள் ” என்று தெரிவித்தார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா ” ஷமி இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக அவர் அவரது பண்ணை வீட்டில் இருந்தார். நாங்கள் அவரை தொடர்பு கொண்டு என்சிஏ வுக்கு அழைத்தோம். அவர் அங்கு மிகவும் கடினமாக உழைத்தார். அவர் இப்போது உடற் தகுதியில் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் தற்போது பிரிஸ்பேனில் எங்களுக்கு முன்பாக இருக்கிறார். நாங்கள் நாளை ( இன்று ) அவருடன் சேர்ந்து கொள்வோம். அவர் நாளை அணியுடன் சேர்ந்து பயிற்சி செய்வார். இப்போது முகமது சமி மிகவும் நேர்மறையான எண்ணத்துடன்தான் இருக்கிறார். சமி உடன் எங்களுக்கு எல்லாம் நல்லவிதமாகவே செல்கிறது. மேலும் அவர் 3, 4 பயிற்சி அமர்வுகளில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி இருக்கிறார் என்பது எங்களது நம்பிக்கையை அதிகரிக்கிறது ” என்று கூறியிருக்கிறார்.

இதற்கடுத்து வீரர்களை நிர்வகிப்பது தொடர்பாக பேசிய ரோகித்சர்மா
“வீரர்களை நிர்வகிப்பதற்கு நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக சில வீரர்களை காயத்தால் இழந்துவிட்டோம். காயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதி. நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது எனவே பென்ச் வலிமை அதிகமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்தோம். காயங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் இதை கருத்தில் கொண்டுதான் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு தந்தோம் ” என்று பேசியிருக்கிறார்!

- Advertisement -