“இவரை எப்படி செலக்ட் பண்ண எதிர்பார்க்கிறிங்க? உங்க டீம சப்போர்ட் பண்ணுங்க” – முரளிதரன் அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
4061
Ashwin

கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக அக்டோபர் 5 ஆரம்பித்து நவம்பர் 19 வரையில் நடத்தப்பட இருக்கிறது!

நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை அணிகளை ஒவ்வொரு அணி நிர்வாகங்களாக வெளியிட்டு கொண்டு வந்தன. இறுதியாக ஆஸ்திரேலிய அணியும் தமது அணியை அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க நிறுவனங்கள் தங்களின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணிகளை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிவித்திருக்கின்றன. உலகக்கோப்பைக்கு அணிகளை அறிவிக்கும் போது, எல்லா கிரிக்கெட் நிர்வாகங்களும் விமர்சனங்களை சந்திப்பதிலிருந்து தப்பிக்கவே முடியாது.

இதற்கு விதிவிலக்கு இல்லாமல் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உலகக்கோப்பை அணிக்காக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாகல் இருவரும் தேர்வு செய்யப்படாதது குறித்து நிறைய விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து லெஜன்ட் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறும்போது
“அஸ்வின் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். பந்துவீச்சில் வேரியேஷன் என்று வரும் பொழுது நான் அவரிடம் சென்று இருப்பேன். அதே சமயத்தில் ஒரு வீரரை தேர்வு செய்ய அவரது தற்கால பார்மும் பார்க்கப்பட வேண்டும். இந்த வகையில் சில காலமாக தொடர்ந்து பேட் மற்றும் பந்துவீச்சில் அக்சர் படேல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை தேர்வு செய்யாமல் இருந்தால் அது சரியான ஒன்றாக இருந்திருக்காது.

- Advertisement -

சாகல் நல்ல பந்துவீச்சாளர். ஆனால் அவர் சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். அதேபோல் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. நிலைமை இப்படி இருக்க அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறிர்கள்?. ஒரு வீரத் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவே இல்லை. இதுதான் அவர் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அஜித் அகர்கர் நல்ல அனுபவமுள்ள நபர். ராகுல் டிராவிட் ஒரு மேதை. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகத்தரம் வாய்ந்த வீரர். எனவே அவர்கள் தங்கள் எண்ணங்களை வைத்து தேர்வு செய்துள்ளனர். அவர்களின் தேர்வை கேள்விக்கு உட்படுத்துவதைவிட, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இந்த வீரர்கள் உலக கோப்பையை வெல்வதற்கு ஆதரவளிப்பது நல்லது!” என்று கூறியிருக்கிறார்!