ஹர்திக் பாண்டியாவின் ஈகோவில் விளையாடி எப்படி விக்கெட்டை பறித்தார் ஸ்மித்? – விளக்கும் தினேஷ் கார்த்திக்!

0
1914
DK

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாகவும் அமைந்து நேற்று முடிந்து இருக்கிறது!

ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான கேப்டனான பேட் கம்மின்ஸ் தனது தாயார் இறப்பின் காரணமாக, இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் பழைய கேப்டன் ஸ்மித் இந்த ஒருநாள் தொடருக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்!

- Advertisement -

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருக்க, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெல்லக்கூடியவர்கள் தொடரை வெல்வார்கள் என்ற நிலை இருந்ததால், நேற்றைய போட்டிக்கு ரசிகர்கள் மத்தியிலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 269 ரன்களுக்கு இந்திய அணி கட்டுப்படுத்தியது. இந்த மைதானத்தில் இது மிகப்பெரிய ரன் இல்லை. ஆனால் அதே சமயத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் தேவையான நேரங்களில் மிக அருமையான புத்திசாலித்தனமான பவுலிங் மாற்றங்கள் மற்றும் பீல்டிங் செட்டப்புகள் செய்து இந்திய அணியை வெற்றியை எட்ட முடியாத அளவுக்கு செய்துவிட்டார்.

நேற்றைய போட்டியில் அக்சர் பட்டேல் ரன் அவுட் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக ஆஸ்திரேலியாவுக்கு அமைந்தது. அதேபோல் ஹர்திக் பாண்டியா விக்கெட் இழந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி உறுதி ஆனது. இந்த இரண்டு விக்கட்டுகளிலும் அவர் தான் யார் என்பதை கிரிக்கெட் உலகத்திற்கு நேற்று மீண்டும் நிரூபித்தார்.

- Advertisement -

ஸ்மித் கேப்டன்சி குறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக் ” ஆட்டத்தின் போது ஒரு புத்திசாலித்தனமான பீல்டிங் செட் அப் வைத்து ஹர்திக் பாண்டியாவின் ஈகோவில் விளையாடி ‘ நான் உங்களுக்கு நேராக லாங் ஆனில் ஒரு பீல்டரை நிறுத்துகிறேன். உங்களால் முடிந்தால் அவரைத் தாண்டி நீங்கள் அடித்துக் கொள்ளுங்கள்’ என்று சவால் விட்டு ஹர்திக் பாண்டியாவின் விக்கட்டை அவர் வீழ்த்தி விட்டார்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் ” ஹர்திக் பாண்டியா வந்ததும் ஆரம்பத்தில் ஸ்வீப் ஷாட்கள் அடித்தார். பின்பு திரும்ப ஆடம் ஜாம்பா வந்த பொழுது ஸ்வீப் ஷாட் அடிக்க ஏதுவாக லாங் ஸ்கொயர் லெக்கில் பீல்டர்கள் நிறுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக லாங் ஆனில் நேராக ஒரு பீல்டரை நிறுத்தி, ஹர்திக் பாண்டியா ஸ்வீப் ஆடாமல், நிறுத்திவைத்த பீல்டருக்குதான் ஆடுவார் என்று ஸ்மித் நம்பி செய்தார். கடைசியில் அவரது நம்பிக்கையே பலித்தது” என்று கூறியிருக்கிறார்!