அஷ்வின் எப்படி வந்தார்? பார்ட் டைம் பவுலர் ஏன் இல்லை? – தெரிஞ்சுக்க வேண்டிய பதில்களை சொன்ன டிராவிட்!

0
2513
Dravid

உலகக் கோப்பைக்கு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் எல்லா அணிகளும், தங்களுடைய உலகக் கோப்பை அணி மாதிரியை கொடுக்க வேண்டும். அடுத்து அந்த அணியை செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

இதற்கு அடுத்து அணியை மாற்ற வேண்டும் என்றால், ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினாலோ இல்லை அவருக்கு காயம் ஏற்பட்டு விளையாட முடியாது என்பதற்கான சான்றிதழ் இருந்தாலும் மட்டும்தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி 27ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அக்சர் படேல் காயத்தில் இருந்து வருகிறார். எனவே இந்தத் தொடர் முடிவில் உலகக் கோப்பை இந்திய அணி வெளியிடப்படும்.

இந்தத் தொடருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் திட்டம் இந்திய அணி நிர்வாகத்துக்கு இல்லை. இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவான பதில்களை கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறும் பொழுது “அஸ்வின் போன்ற அனுபவம் உள்ள ஒருவர் திரும்பி வருவது நல்ல விஷயம். அவர் அனுபவத்தை எங்களுக்கு தருகிறார். அவரால் எட்டாம் இடத்தில் பேட்டிங் பங்களிப்பும் செய்ய முடியும். ஏதாவது திடீர் காயங்கள் ஏற்பட்டால் நாங்கள் அந்த இடத்திற்கு அவரை யோசித்து வைத்திருந்தோம்.

- Advertisement -

அவர் எப்பொழுதும் எங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தார். அவர் கடைசியாக அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அவரது அனுபவத்தால் அதை அவரால் சமாளிக்க முடியும்.

பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடியாததற்கு விதிமாற்றம் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். முன்பு உள் வட்டத்தில் மதியம் ஓவர்களில் நான்கு பீல்டர்கள் மட்டுமே இருந்தார்கள். இப்பொழுது இது ஐந்தாக அதிகரித்துவிட்டது. இதனால் வெளிவட்டத்தில் ஒரு ஃபீல்டர் குறைவாகிவிட்டார்.

இது மத்திம ஓவர்களை வீசக்கூடிய பகுதி நேர பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக மாறிவிட்டது. பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பலர் முன்பு இருந்த விதியின் போது பந்து வீசியவர்கள். அப்போது நாங்கள் மட்டுமல்ல பல அணிகளும் பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தின.

நீங்கள் கவனித்தீர்கள் என்றால் மற்ற அணிகளிலும் பகுதி நேர பந்துவீச்சாளர்களை இதன் காரணமாக பயன்படுத்துவது குறைந்துள்ளது. இது இந்திய அணிகள் மட்டும் நடக்கவில்லை. மேலும் இரண்டு முனைகளிலும் இரண்டு புதிய பந்து பயன்படுத்தப்படுவதும் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம்!” என்று கூறியிருக்கிறார்!