“அவர் எப்படி வேணா மாறுவாருங்க.. இப்ப புதுசா ஒரு குழப்பத்தை உண்டாக்கிட்டாரு!” – இந்திய வீரர் பற்றி இந்திய முன்னாள் வீரர் கருத்து!

0
1732
ICT

ஆசியக்கோப்பைக்கு முன்பு இருந்த இந்திய அணிக்கு யாரைத் தேர்வு செய்வது? என்கின்ற தலைவலி இருந்தது. இப்பொழுது யாரை விடுவது? என்று புரியாமல் தலைவலியாக இருக்கிறது. அதாவது தலைவலி நல்லதாக மாறி இருக்கிறது!

இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரில் இருந்து யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். இரண்டு துறையில் இதுவரை வாய்ப்பு கொடுக்கப்பட்ட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது சந்தேகங்கள் இருந்தது, சூரியகுமார் தொடர்ச்சியாக அதிரடியாக இரண்டு அரை சதங்கள், ஸ்ரேயாஸ் அதிரடியாக சதம் விளாசி சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

இன்னொரு பக்கத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக பரிசோதிப்பதற்காக அணியில் எடுத்துவரப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எக்கச்சக்கமாக அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் புதிய வகையை வேறு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அஸ்வின் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது
“அஸ்வின் சரியான மாற்று வீரரா? என்பதில் எப்பொழுதும் சந்தேகமே கிடையாது. அவர் இந்த வடிவத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு விளையாடுகிறார். மேலும் விளையாடுவதற்கு அவரிடம் இன்னும் ஏதாவது இருக்கிறதா? என்று மட்டுமே பார்க்க வேண்டியது இருந்தது.

- Advertisement -

ஆனால் அவர் அதைக் கூடுதலாகவே நிரூபித்து விட்டார். டேவிட் வார்னர் வலது, இடது என்று மாறி மாறி கொடுத்த சவாலை, மிக அற்புதமாக தனது புத்திசாலித்தனமான பந்துவீச்சால் முறியடித்து தன்னை நிரூபித்து இருக்கிறார்.

டேவிட் வார்னர் வலது கையில் பேட்டிங் செய்ய துவங்கும் பொழுது அவர் கேரம் பந்தை பயன்படுத்த தொடங்கினார். அதில் அவர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தேவைப்படும் பொழுது வலதுகை வீரருக்கு கேரம் பந்தை வீசுவது மாதிரி, அவரால் எப்படி வேண்டுமானாலும் மாறிக்கொள்ள முடிகிறது.

தற்பொழுது அவர் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் மேலும் குழப்பத்தை அதிகரித்திருக்கிறார். அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரில் யாரை எடுப்பது? என்பது எளிதான விஷயமாக இருக்காது!” என்று கூறியுள்ளார்!