“எல்லாமே மோசமா இருந்தா எப்படி ஜெயிக்கிறது?.. எங்களால எதுவுமே பண்ண முடியல!” – பாபர் அசாம் விரக்தி பேச்சு!

0
3034
Babar

இன்று பாகிஸ்தான் அணி பொதுவாக உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணியிடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இன்று சென்னை மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆப்கானிஸ்தான் அணி 4 பிரதான சுழற் பந்துவீச்சாளர்களுடன் களத்தில் இறங்கியது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக டாஸ் கிடைத்தது. அவர்கள் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு எடுத்தார்கள். கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்தது.

இந்த ஆடுகளத்திற்கும் மற்றும் எதிரணிக்கும் இது நல்ல ஸ்கோர் ஆகவே ஆரம்பத்தில் தெரிந்தது. ஆனால் துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருவரும் அரை சதம் அடித்தார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் இன்றைய நாளிலும் மிக மோசமாக இருந்தது. அவர்கள் சாதாரணமாக கைக்கு வரும் பந்தை கூட தவறவிட்டு ரன் தந்தார்கள். ஒரு கட்டத்தில் போட்டியை பார்க்க முடியாமல் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் எழுந்து உள்ளே சென்று விட்டார்.

மேலும் நடு பகுதி ஓவர்களில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் எந்த ரன் அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுது ஆப்கானிஸ்தான் அணி இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்விக்குப்பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “எங்களிடம் நல்ல ஸ்கோர் இருந்தது. ஆனால் நாங்கள் நடுப்பகுதியில் விக்கெட் எடுக்காத காரணத்தினால் எங்களால் போட்டிக்கு வர முடியவில்லை. ஒரு உலகக் கோப்பை தொடரின் ஆட்டத்தில் நீங்கள் ஒரு துறையில் சரியாக செயல்பட விட்டால் கூட உங்களால் போட்டியை வெல்ல முடியாது.

பந்து வீசும்போது நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். ஆனால் எங்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. எல்லாப் புகழும் ஆப்கானிஸ்தானுக்குதான்.

நாங்கள் நல்ல முறையில் கிரிக்கெட் விளையாடவில்லை. குறிப்பாக பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங். ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் கூட ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நிலைமைகள் இருந்தது. ஆனால் எங்களால் அவர்களின் பேட்ஸ்மேன் களுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -